பொல்கொல்ல அணைக்கு கீழே மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 5 இளைஞர்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த ஐந்து இளைஞர்களும் 25ஆம் திகதி புதன்கிழமை மது அருந்திவிட்டு மகாவலி ஆற்றில் இறங்கியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
பொல்கொல்ல நீர்த்தேக்கத்திலிருந்து விக்டோரியாவிற்கு நீர் திறக்கும் வாயில் ஒன்று புதன்கிழமை (25) காலை முதல் திறக்கப்பட்டுள்ளதுடன், அதில் சிக்கிய 5 இளைஞர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதுடன், மூவர் கற் பாறைகளில் தொங்கி உயிர் பிழைத்துள்ளனர்.
இந்த இளைஞர்கள் அனைவரும் கண்டி-யக்கஹபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவருகிறது.
நீரில் அடித்துச் செல்லப்பட்டு, காணாமல் போன இருவரில் ஒருவர் தனஞ்சய இந்துவர (22) எனவும் மற்றவர் யாரெனத் தெரியாது என உயிர் தப்பியோர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரு இளைஞர்களை தேடும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM