(நா.தனுஜா)
தமிழ், முஸ்லிம் கட்சிகள் இணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலில் பலமானதொரு தரப்பாகப் போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வருவதாக அறியமுடிகிறது.
குறிப்பாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் ஆகியோருக்கிடையில் செவ்வாய்கிழமை (24) கொழும்பில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இச்சந்திப்பின்போது நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதித்தேர்தல் மற்றும் அதன் பெறுபேறுகள் குறித்தும், எதிர்வரவுள்ள பொதுத்தேர்தல் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இதுபற்றி ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், 'அடுத்த தேர்தலில் அரசாங்கமொன்றை அமைப்பதற்காக மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளத் தயாராகி வருகின்றோம். இம்முறை தேசிய மக்கள் சக்தியே ஐக்கிய மக்கள் கூட்டணிக்கான முக்கிய சவாலாகக் காணப்பட்டது. ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு அப்பால் இருக்கும் ஏனைய கட்சிகளுடனும் கூட்டணி அமைப்பதற்கு முயற்சித்து வருகின்றோம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் மேற்குறிப்பிட்ட சந்திப்பு பற்றி சுமந்திரனிடம் வினவியபோது, நடைபெற்று முடிந்த ஜனாதிபதித்தேர்தல் குறித்தே தாம் கலந்துரையாடியதாகவும், பொதுத்தேர்தல் தொடர்பில் எதுவும் பேசவில்லை எனவும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM