நல்லாட்சி அரசாங்கத்தின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றை திருத்தம் செய்து ஹட்டன் டிபோவிற்கு மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்டுள்ளது.

ஹட்டன் டிபோ நிலையத்திற்கு செந்தமான இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் ஒன்று மிக நீண்ட காலமாக மக்கள் பாவனைக்கு உதவாமல் பழுதடைந்த நிலையில் காணப்பட்டது.

இதனை சீர்திருத்தம் செய்து சபை முதல்வரும் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷமன் கிரிஎல்ல தலைமையில் நேற்று ஹட்டன் பஸ் நிலையத்தில் வைத்து மக்கள் பாவனைக்காக வைபவ ரீதியாக ஹட்டன் டிபோவிற்கு பஸ் கையளிக்கப்பட்டது.

கையளிக்கப்பட்ட பஸ் தினமும் காலை 7.50 மணிக்கு நோட்டன் பிரிடஜ் லக்ஷபான, கினிகத்தேனை வழியாக நாவலப்பிட்டி வரை சேவையில் ஈடுப்படுத்தப்படும்.

இந்நிகழ்வினை நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸ தலைமை தாங்கி நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

(க.கிஷாந்தன்)