உயர் தர மாணவியை ஏமாற்றி விடுதிக்கு அழைத்துச் சென்ற பாடசாலை அதிபருக்கு எதிராக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

25 Sep, 2024 | 05:40 PM
image

திப்பிட்டிய நகரத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் உயர் தர மாணவி ஒருவரை ஏமாற்றி விடுதிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படும் அதே பாடசாலையில் கடமையாற்றும் அதிபருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி பெற்றோர்கள் சிலர் குறித்த பாடசாலைக்கு முன்பாக இன்று (25) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சந்தேக நபரான 42 வயதுடைய பாடசாலை அதிபர் தனது பாடசாலையில் கல்வி கற்கும் உயர் தர மாணவி ஒருவரிடம் பரீட்சை வினாத்தாளின் பதில்களைச் சொல்லித் தருவதாகக் கூறி மாணவியை ஏமாற்றி விடுதி ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான பாடசாலை அதிபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கடந்த 19 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்படாமல் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகப் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், சந்தேக நபர் குறித்த பாடசாலையில் அதிபராகத் தொடர்ந்து கடமையாற்றி வருவதாகவும் சந்தேக நபருக்குப் பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்கள் சிலர் ஆதரவளித்து வருவதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பலாந்தோட்டையில் ஒருவர் வெட்டிக் கொலை ;...

2026-05-12 14:07:29
news-image

முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி...

2026-05-12 14:10:27
news-image

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவு ஊர்தி...

2026-05-12 13:40:55
news-image

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார்...

2026-05-12 13:26:51
news-image

பெலாரஸுக்கு புறப்படுகிறார் அமைச்சர் விஜித்த ஹேரத்

2026-05-12 13:28:09
news-image

கடும் மழையினால் மட்டு. மண்டூர் -...

2026-05-12 13:23:34
news-image

யாழில் காணி விடுவிப்பு தொடர்பில் ஆளுநர்...

2026-05-12 13:08:37
news-image

யாழ்.போதனாவில் அரச பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள்...

2026-05-12 12:52:31
news-image

மஹியங்கனையில் துப்பாக்கிச் சூடு – பெண்...

2026-05-12 12:48:27
news-image

நாடளாவிய ரீதியில்  42 டெங்கு அபாய...

2026-05-12 12:11:53
news-image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச...

2026-05-12 11:17:59
news-image

கணினி குற்றங்களுடன் தொடர்புடைய 198 வெளிநாட்டவர்கள்...

2026-05-12 09:13:47