ஒவ்வொரு அயல் நாட்டினதும் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையையும் கட்டுப்படுத்துவதற்கு இந்தியா முயல்வதில்லை - ஜெய்சங்கர்

Published By: Rajeeban

25 Sep, 2024 | 04:37 PM
image

பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு வழங்கப்பட்ட நிதியுதவிகளின் போது அரசியல் நிபந்தனைகள் எதனையும் விதிக்கவில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்  தெரிவித்துள்ளார்.

நியுயோர்க்கில் ஆசிய சமூகத்தின் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்தவேளை நாங்கள் உதவ முன்வந்தோம் வெளிப்படையாக சொல்வதென்றால் யாரும் உதவ முன்வராதபோது நாங்கள் உதவமுன்வந்தோம் என  குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் இதனை செய்தோம் என்பது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம்தக்க தருணத்தில் குறிப்பிடத்தக்க அளவில் நாங்கள் உதவினோம்  4.5 மில்லியன் டொலர் வலுவான ஆதரவை வழங்கினோம் என  ஜெய்சங்கர்  தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தில் சமீபத்தில் ஏறு;பட்டுள்ள மாற்றம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்( கேள்வி கேட்டவர்  இந்தியாவிற்கு பாதகமாக அமையலாம் என தெரிவித்தார்) இலங்கையில் அரசியல் மாற்றங்கள் குறித்து இலங்கையே தீர்மானிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அரசியல்ரீதியாக என்ன நடைபெறுகின்றது என்பதை அந்த நாட்டின் அரசியலே தீர்மானிக்கவேண்டும் இறுதியில் எங்களின் ஒவ்வொரு அயல்நாட்டிற்கும் அவர்கள் இயங்கும் செயற்படும் வழிமுறையுள்ளதுஇ எங்களிற்கு எந்த இயக்கவியல் சரியானது என நாங்கள் கருதுகின்றோமோ அதனை  அவர்கள் பின்பற்றவேண்டும் என நாங்கள் பரிந்துரைப்பது எங்கள் நோக்கமல்ல என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இது உண்மையான உலகம் நாடுகள் ஒன்றுக்கொன்று அனுசரித்து செயற்படுவதற்கான வழிகளை கண்டுபிடிக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

அண்டை நாடுகளின் அரசியல் நிலப்பரப்பை கட்டுப்படுத்துவதற்கு இந்தியா முயலவில்லைஇஒவ்வொரு அயல்நாடுகளின் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்துவதற்கு இந்தியா முயல்வதில்லை ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு இயக்கவியலை கொண்டிருக்கும் என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அயல்நாடுகளி;ன இயக்கவியலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும் இந்த உறவுகளை கையாள்வதற்கான இந்தியாவின் திறன்  குறித்து நம்பிக்கை கொண்டுள்ளோம்இஎங்கள் அயலில் ஒன்றுக்கொன்று சார்ந்திருந்தல், பரஸ்பர நன்மைகள் மற்றும் பழகும் திறன் ஆகியவை எங்கள் நலன்களிற்கு உதவும்இஎன்பது குறித்து நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கின்றேன்இஇந்த உண்மைகள் தங்களை உறுதிப்படுத்திக்கொள்ளும் இதுவே வரலாறு என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமை பறிக்கப்படுமா ?...

2025-03-15 18:57:17
news-image

ரணில் தம்பதியினரின் லண்டன் விஜயத்துக்கு 160...

2025-03-15 17:06:12
news-image

அநுர அரசாங்கமும் வேறுபடவில்லை : ஹக்கீம்

2025-03-15 17:09:04
news-image

அரசின் உள்ளகப்பொறிமுறை தீர்மானம் வெட்கக்கேடானது :...

2025-03-15 18:22:55
news-image

மிலேச்சத்தனமான கொலைகளால் மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்...

2025-03-15 18:20:59
news-image

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு கொலை,...

2025-03-15 17:42:58
news-image

தமிழக மீனவர்கள் வடக்கு மீனவர்களின் வளங்களை...

2025-03-15 18:55:26
news-image

இராணுவத்தினர் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டனர் எனக்கூறுவதை ஏற்றுக்கொள்ள...

2025-03-15 17:12:06
news-image

"கிளீன் ஸ்ரீலங்கா" வின் கீழ் நுகர்வோர்...

2025-03-15 18:51:00
news-image

வரிச் சலுகைகளை உடன் நடைமுறைப்படுத்துங்கள் ;...

2025-03-15 17:29:19
news-image

பொருளாதாரத்தில் பெண்களின்பங்களிப்புக்கு தடையாக உள்ள காரணிகளை...

2025-03-15 17:35:45
news-image

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு ; 'சமன்கொல்லா'...

2025-03-15 17:34:44