நியூஸிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட் இலங்கை அணியில் நிஷான் பீரிஸ்

25 Sep, 2024 | 04:39 PM
image

(நெவில் அன்தனி) 

காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நாளை வியாழக்கிழமை (26) ஆரம்பமாகவுள்ள நியூஸிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு அமைய சுழல்பந்துவீச்சாளர் நிஷான் பீரிஸ் அறிமுக வீரராக  விளையாடவுள்ளார். 

அதேவேளை, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சகல துறைகளிலும் பிரகாசித்த சகலதுறை வீரர் மிலான் ரத்நாயக்க மீண்டும் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். 

முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய சுழல்பந்துவீச்சாளர் ரமேஷ் மெண்டிஸ், வேகப்பந்துவீச்சாளர் லஹிரு பெர்னாண்டோ ஆகியோருக்குப் பதிலாகவே நிஷான் பீரிஸ், மிலன் ரத்நாயக்க ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

41 முதல் தர ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 86 விக்கெட்களை நிஷான் பீரிஸ் வீழ்த்தியுள்ளார். 

நியஸிலாந்துக்கு எதிரான தொடரில் முழுமையான வெற்றியை ஈட்டும் குறிக்கோளுடன் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 

2ஆவது டெஸ்டுக்கான இலங்கை அணி: திமுத் கருணாரட்ன, பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால், ஏஞ்சலோ மெத்யூஸ், தனஞ்சய டி சில்வா (தலைவர்), கமிந்து மெண்டிஸ், நிஷான் பீரிஸ், ப்ரபாத் ஜயசூரிய, மிலன் ரத்நாயக்க, அசித்த பெர்னாண்டோ 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right