உங்களுக்கு நன்மை பயக்கும் சூட்சும நட்சத்திரங்கள்

Published By: Digital Desk 7

25 Sep, 2024 | 06:24 PM
image

எம்மில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்திருப்போம். எம்முடைய குடும்பத்தில் குறிப்பிட்ட சில நட்சத்திரத்தில் ஆண் பிள்ளையோ அல்லது பெண் பிள்ளையோ பிறந்து விட்டால் அந்த குடும்பம் அதிவிரைவாக முன்னேற்றம் காணும். இதனையும் நீங்கள் அனுபவத்தில் கண்டிருப்பீர்கள்.

இதற்கு அந்த குடும்பத்தில் பிறந்த ஆண் பிள்ளை அல்லது பெண் பிள்ளை சாஸ்திரங்கள் குறிப்பிட்டுள்ள படி 'ஓட' நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள்.  உடனே எம்மில் சிலர் அது என்ன 'ஓட' நட்சத்திரம்...? என வினா எழுப்புவர்.  'ஓட' என்றால் ஓடம் என பொருள். ஓடம் என்றால் நடு கடலில் கரை காணாமல் தவிக்கும் போது ஓடத்தை கண்டால்  அதனை கைப்பற்றிக் கொள்வார்கள்.

அந்த ஓடம் அவர்களை பாதுகாப்பாக கரைக்கு சென்று சேர்க்கும். இதனால் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் ஜலராசி என குறிப்பிடப்படும் கடகம் துலாம் மீனம் ஆகிய ராசிகளில் இடம் பிடித்திருக்கும் ஒன்பது நட்சத்திர பாதங்களை கொண்ட மூன்று நட்சத்திரங்களை.. 'ஓட நட்சத்திரம்' என வகைப்படுத்தியிருக்கிறார்கள்.

அந்த நட்சத்திரம் எது? என்பதனை அறிந்து கொள்வதற்கும் முன் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு என்ன விசேடம் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். இவர்களிடத்தில் இயல்பாகவே ஒரு சூட்சும ஆற்றல் மறைந்திருக்கும். இவர்களுக்கு ஆன்மீகத்தில் பால்ய பிராயத்திலிருந்து நாட்டம் இருக்கும்.

இவர்கள் சபையில் ஒரு சொல் சொன்னாலும் அது சபையினரால் அங்கீகரிக்கப்படும். அந்த அளவிற்கு வாக்குபலிதமும், வாக்கு வன்மையும் இவர்களிடத்தில் உண்டு.  இவர்கள் மகான்களையும் சாதுக்களையும் சந்திக்கும் பாக்கியத்தையும் பெற்றவர்கள். அதனூடாகவே இவர்களை சந்தித்த பிறகு இவர்களுக்கான ஆத்ம பலம் அதிகரிக்கும்.

மேலும் இவர்களிடத்தில் பிரத்யேகமான அறிவும், ஆற்றலும் நிரம்பி இருக்கும். இவை அனைத்தும் வெளிப்பட வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. இருந்தாலும் இவர்களிடத்தில் இருக்கும் அறிவையும், ஆற்றலையும் நாம் எம்முடைய வாழ்க்கைக்கான முன்னேற்றத்திற்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால் இவர்களை நாம் நட்பாக்கி கொள்ள வேண்டும்.

இவர்களிடத்தில் நட்பு பாராட்ட முடியவில்லை என்றாலும் இவர்களை வணங்கி உங்களால் தான் எம்முடைய பிரச்சனைகளுக்கு தீர்வினை வழங்க முடியும் என்று பாதம் பணிந்தால் இவர்கள் உங்களுக்கு உடனிருந்து வழிகாட்டி வாழ்க்கையில் வெற்றியை அளிக்கும் ஆற்றல் படைத்தவர் ஆவார்.

அந்த அளவிற்கு சக்தி கொண்ட நட்சத்திரங்கள் எதுவென்றால் புனர்பூசம் - அனுஷம்-  ரேவதி - அதிலும் குறிப்பாக  புனர்பூசம் நான்காம் பாதம், அனுஷம் ஒன்று முதல் நான்கு பாதங்கள், ரேவதி - ஒன்று முதல் நான்கு பாதங்கள்.

இந்த ஒன்பது நட்சத்திர பாதங்களில் ஏதேனும் கிரகங்கள் இருந்து அவை திசை நடத்தினால்  இவர்கள் மிகப்பெரிய வெற்றியினை சந்திப்பார்கள். சாதனையும் படைப்பார்கள். இந்த ஒன்பது நட்சத்திர பாதங்களை கொண்டவர்கள் உங்களது வீட்டில் இருந்தால் அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கி, பிரச்சனைகளை அவரிடத்தில் விட்டு விடுங்கள். அவர்கள் எந்த பிரச்சனையாக இருந்தாலும் எளிய முறையில் தீர்வினை கண்டுபிடித்து விடுவார்கள். வெற்றியையும் அளிப்பார்கள்.

தொகுப்பு : சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண வரவை அதிகரிப்பதற்கான எளிய வாழ்வியல்...

2024-10-12 18:08:24
news-image

பண வரவை அதிகரிப்பதற்கான பிரத்யேக குபேர...

2024-10-12 08:46:23
news-image

நீச்சமடைந்த கிரகங்களுக்குரிய வாழ்வியல் பரிகாரம்...?

2024-10-09 17:13:33
news-image

திடீர் அதிர்ஷ்டம் கிடைப்பதற்கான சூட்சமமான வழிபாடு...!!?

2024-10-08 17:13:01
news-image

இல்லங்களில் சகல ஐஸ்வரியங்களும் தங்குவதற்கான எளிய...

2024-10-07 15:06:17
news-image

சுக்கிர பகவானின் வலிமையை அதிகரித்துக் கொள்வதற்கான...

2024-10-05 21:38:45
news-image

அதிக நன்மைகளை அள்ளித் தரும் பாணலிங்கம்

2024-10-04 18:33:02
news-image

தீய சக்திகள் விலகுவதற்கான எளிய வழிமுறைகள்..?

2024-10-03 16:20:27
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் கண்...

2024-10-03 17:10:09
news-image

பாலாரிஷ்ட தோஷத்தை அகற்றும் சப்த கன்னிமார்...

2024-10-01 16:59:14
news-image

ஒக்டோபர் மாத ராசி பலன்கள் 2024

2024-09-30 18:10:05
news-image

வருவாய், வருமானம் அதிகரிப்பதற்கான சூட்சம வழிமுறைகள்...!?

2024-09-30 16:53:33