அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறையில் உள்ள உடங்கா பிரதேசத்தில் அம்பாறை -கல்முனை பிரதான வீதியின் ஒரு மருங்கில் சுமார் 2 மாதங்களுக்கு மேல் குடிநீர் வீணடிக்கப்பட்டு வருகிறது.
கடந்த காலங்களில் அப்பகுதியில் வீதி புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், சேதமாக்கப்பட்டதாக கூறப்படும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு சொந்தமான குடிநீர் குழாய் திருத்தப்பட்ட பின்னர், இவ்வாறு மேலதிக நீரை தினமும் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அப்பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இக்குழாயினூடாக வீணாக வழிந்தோடும் நீர், வடிகானினூடாக அருகில் உள்ள குளத்தினை நோக்கி சுமார் 2 கிலோமீற்றர் வீணாக வெளியேற்றப்பட்டு கலக்கப்படுகிறது.
அத்துடன் சம்மாந்துறை பகுதியில் இன்னும் பல குடும்பங்கள் குடிநீர் இணைப்பின்றி அல்லற்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் நீர் வீணாக வெளியேற்றப்படுவது பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நாட்டில் நிலவும் கடும் உஷ்ணத்தின் விளைவாக தண்ணீருக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனையடுத்து அத்தியாவசியமற்ற நடவடிக்கைகளுக்காக நீரை பயன்படுத்துவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அடிக்கடி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.
இந்நிலையில், குடிநீர் வீணாக வெளியேற்றப்படுவது தொடர்பில் ஏன் பலரும் அசமந்தத்தனமாக உள்ளனர் என்றும் அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அத்தோடு, இது தொடர்பில் உரிய தரப்பினர் கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிடின், நீர் வீணாக வெளியேறிச் செல்வதானால் எதிர்காலத்தில் நிலவக்கூடிய நீர் தட்டுப்பாட்டை யாராலும் தடுக்க முடியாது என்றும் தெரிவிக்கின்றனர்.
சில பிரதேசங்களில் குழாய் நீர் கசிவு என்பது சாதாரணமாகக் கருதப்பட்டாலும் இப்பகுதியில் ஏற்பட்டுள்ள நீர் வீண்விரயம் பாரதூரமானது. குடிநீர் விநியோகக் குழாய்களில் அழுத்தம் அதிகரிக்கும்போது வெடிப்புக்கள் ஏற்படக்கூடும்.
சில பிரதேசங்களில் பொருத்தப்பட்டுள்ள நீர்க் குழாய்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டு மணித்தியாலக்கணக்கில், நாட்கணக்கில் குடிநீர் வீண்விரயமானால், அது தொடர்பில் பின்னர் கவனம் செலுத்தப்பட்டு நிலைமை சீர் செய்யப்படும்.
ஆனால், எமது பிரதேசத்தில் நிலைமை அவ்வாறில்லை. இங்கு நீர் பிரச்சினைகள் அதிகமாக காணப்படுகிறது. இவை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM