தெற்காசியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதி விரைவாக உயர்ந்து வருகிறது என உலக சுகாதார ஸ்தாபனம் கவலையுடன் குறிப்பிடுகிறது. அதே தருணத்தில் அனைவரும் ரத்த சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என வைத்திய நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
முதியவர்களுக்கு குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவில்லை என்றால் அவர்களுக்கு பாதம், கால், சிறுநீரகம், இதயம், நரம்பு மண்டலம் ஆகிய உறுப்புகள் பாதிக்கப்படுவது போல் செவித்திறன் பாதிப்பும் ஏற்படும் என வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள்.
ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாதவர்கள் தங்களுக்கு சௌகரியப் படி காதுகளை சுத்தம் செய்தால் அதனால் பாதிப்பு ஏற்படும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் பட்ஸ் எனப்படும் பஞ்சினை கொண்டு காதுகளை சுத்தம் செய்யக் கூடாது.
அதையும் மீறி செய்தால் நடுக் காதில் பிரத்யேக பாக்டீரியா தொற்று பாதிப்பு ஏற்படக்கூடும். இதனை மருத்துவ மொழியில் நெக்றோடைசிங் ஓடிடிஸ் மீடியா என குறிப்பிடுவார்கள். அதிலும் அவர்கள் சர்க்கரை நோயாளிகள் என்பதால். இந்த பாக்டீரியா தொற்று, காதின் வழியாக மூளை வரை சென்று உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும்.
இதனால் சர்க்கரை நோயாளிகள் அவர்களின் காதுகளில் கழிவுகள் எனப்படும் மெழுகு படிந்து இருந்தாலும் அதனை நீங்களாக சுத்தப்படுத்திக் கொள்ளாமல், காது சிகிச்சை வைத்திய நிபுணரிடம் சென்று அதனை சுத்தப்படுத்திக் கொள்வது தான் பாதுகாப்பானது.
மேலும் நடுக் காதில் ஏதேனும் பாக்டீரியா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் அவர்கள் சர்க்கரை நோயாளிகளாக இருந்தால் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியரை சந்தித்து அவர் பரிந்துரைக்கும் பரிசோதனையையும், சிகிச்சையும் பின்பற்ற வேண்டும்.
இதன் போது வைத்திய நிபுணர்கள் நவீன மருத்துவ தொழில் நுட்பங்களால் கண்டறியப்பட்டிருக்கும் பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை வழங்கி உங்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்குவர். அத்துடன் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், காதினை சுத்தம் செய்து கொள்ளும் போது சுயமாக சுத்தம் செய்து கொள்ளக் கூடாது என்பதையும் பரிந்துரையாக முன் வைப்பார்கள். இதை உறுதியாக பின்பற்றினால் சர்க்கரை நோயால் ஏற்படும் செவித்திறன் பாதிப்பினை ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளலாம்.
வைத்தியர் ஜனனி
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM