5 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற 17 வயது சிறுவன் கைது

25 Sep, 2024 | 12:29 PM
image

5 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

17 வயதுடைய சிறுவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

கடந்த 22 ஆம் திகதி அன்று இரவு இந்த சிறுமி தனது தந்தையுடன் உறங்கிக்கொண்டிருந்துள்ள நிலையில் சிறுமியின் தாய் சுகயீனம் காரணமாக வேறொரு அறையில் உறங்கிக்கொண்டிருந்துள்ளார்.

இதன்போது, சிறுமியின் வீட்டிற்கு அருகில் உள்ள மற்றுமொரு வீட்டில் வசிக்கும் 17 வயதுடைய சிறுவன் ஒருவன் சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்து, சிறுமியை அருகில் உள்ள வயல் வெளிக்குச் கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார்.

சிறுமி வீட்டில் இல்லாததை அறிந்து கொண்ட சிறுமியின் பெற்றோர் சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வயல் வெளிக்குச் சென்று பார்த்துள்ளனர். 

இதன்போது, இந்த சிறுமி மிகவும் அச்சத்துடன் வயல் வெளியில் தனிமையிலிருந்துள்ளார். 

இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

பின்னர், விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேக நபரான சிறுவனைக் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரான சிறுவன் இந்த சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி பரிசோதனைக்காக களுபோவில போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகவில்லை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மேயர் வேட்பாளர்கள் குறித்து அடுத்த வாரம்...

2025-03-20 20:39:53
news-image

புதிய வரி விதிப்பு முறைமையை உருவாக்க...

2025-03-20 15:14:37
news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27
news-image

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு...

2025-03-20 20:41:27
news-image

கிழக்கு முகாம்களில் நடைபெற்ற சித்திரவதை படுகொலைக்கு...

2025-03-20 15:58:26
news-image

வரவு,செலவுத்திட்டத்தினை மக்கள் விமர்சிப்பதற்கு அதிகாரச் சிறப்புரிமையே...

2025-03-20 20:40:25
news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34
news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43
news-image

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி...

2025-03-20 16:01:42
news-image

செட்டிக்குளத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-03-20 19:54:38