கென்யாவின் பிரதம அமைச்சரவை செயலாளரும் வெளிவிவகார அமைச்சு மற்றும் புலம்பெயர் விவகாரங்களுக்கான அமைச்சு ஆகியவற்றின் செயலாளருமான கலாநிதி முசலிய முதவடி வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
முசலிய முதவடி கென்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான மற்றும் நட்பு உறவை தனது வாழ்த்து செய்தியில் பாராட்டியுள்ளார்.
அத்தோடு, இராஜதந்திர தொடர்புகள் ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து இந்த உறவுகள் எவ்வாறு தொடர்ந்து வளர்ந்து வருகின்றன என்பதைக் குறிப்பிட்டார்.
இது கென்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான நட்பு உறவுகள், இராஜதந்திர உறவுகள் எவ்வாறு தொடர்ந்து வளர்ந்து வருகின்றன என்பதைக் குறிப்பிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையுடனான கென்யாவின் வரலாற்று உறவை எடுத்துரைத்து இரு நாடுகளின் நலனுக்காக இந்த பிணைப்புகளை மேலும் வலுப்படுத்த கென்யாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
பரஸ்பர நலன்களை முன்னெடுத்துச் செல்வதிலும், இரு நாடுகளுக்குமிடையில் ஆழமான ஒத்துழைப்பை வளர்ப்பதிலும் கென்யா உறுதணையாக இருக்கும் என வலியுறுத்தியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM