அனுராதபுரம் - தஹய்யாகம பகுதியில் வைத்து வெடி பொருளொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 29 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் குறித்த நபரை இன்று அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.

இதேவேளை மினுவாங்கொடை - ஹீனடியான பகுதியில் துப்பாக்கி மற்றும் ரவைகள் வைத்திருந்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பொலிஸ் சட்ட அமுலாக்கல் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டிருந்தவரிடமிருந்து இரண்டு டி56 ரக துப்பாக்கிகள் மற்றும் 263 ரவைகள், ஒரு வெடி பொருள் மற்றும் 25 துப்பாக்கி ரவைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் சந்தேக நபர் தொடர்பிலான விசாரணையை நீர்கொழும்பு மற்றும் கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.