இலங்கையின் 9 ஆவது புதிய ஜனாதிபதியின் பதவியேற்பினை முன்னிட்டு பல சமூக நலப்பணிகளும் சமய நிகழ்வுகளும் நாடு முழுவதிலும் திங்கட்கிழமை (23) இடம்பெற்றன.
தேசிய மக்கள் சக்தி (NPP)யில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற அனுர குமார திசாநாயக்க புதிய 9 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.
குறித்த நிகழ்வினை முன்னிட்டு அவருக்கும் புதிய அரசாங்கத்தின் எதிர்கால வெற்றிக்கும் ஆசி வேண்டி விஷேட துஆ பிராத்தனையொன்று தேசிய மக்கள் சக்தி கல்முனைத் தொகுதி அமைப்பாளர் ஆதம்பாவா தலைமையில் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜூம்மா பள்ளிவாசலில் அஸர் தொழுகையின் பின்னர் இன்று இடம்பெற்றது .
இந் நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் ஒலுவில் , கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர், மருதமுனை, நற்பிட்டிமுனை, மாளிகைக்காடு, பெரிய நீலாவணை , உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் உட்பட பிரதேச இளைஞர்கள் இதில் கலந்து கொண்டனர்.
அத்துடன் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் ஆதம்பாவா பள்ளிவாசலின் நிர்வாகிகள் உட்பட தேர்தலில் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி கூறி உரையாற்றியதுடன் இறுதியாக விசேட துஆ பிராத்தனையுடன் இந்நிகழ்வு சிறப்பாக நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM