எம்மில் சிலருக்கு கடினமான காலகட்டங்களில் முகம் தெரியாத பலர் பல வகையினதான உதவிகளை செய்திருப்பர்.
அதனை நாமும் கடவுளின் ஆசி என ஏற்று கொண்டிருப்போம். சிலரை எமக்கு சுத்தமாக பிடிக்காது. இருந்தாலும் அவர்கள் நமக்கு கஷ்டப்படும் காலங்களில் எல்லாம் மறைமுகமாக உதவி செய்து கொண்டே இருப்பார்கள். இதன் பின்னணி நமக்கு புரிவதில்லை.
வேறு சிலருக்கு அவர்களின் ஆயுள் முழுவதும் குறிப்பிட்ட நட்சத்திரக்காரர்கள் மனமுவந்து உதவி செய்வதை தங்களுடைய வழக்கமாக கொண்டிருப்பார்கள்.
இதனுடைய சூட்சமமும் எம்மில் பலருக்கு தெரிவதில்லை. இந்நிலையில் எம்முடைய முன்னோர்கள் ஆயுள் முழுவதும் ஆதரவு தெரிவிக்கும் நட்சத்திரங்கள் குறித்த சூட்சமத்தை விளக்கி இருக்கிறார்கள். அதனை விரிவாக கீழே காண்போம்.
எம்முடைய ஜாதகத்தில் ஆத்ம காரகன் என போற்றப்படும் சூரியன் எந்த நட்சத்திரத்தில் அமர்ந்திருக்கிறாரோ அந்த நட்சத்திரத்தில் இருந்து அடுத்து வரும் நட்சத்திரங்களை மூன்று மூன்றாக ஒவ்வொரு நட்சத்திரங்களையும் வகைப்படுத்த வேண்டும்.
இதற்காக கீழ்கண்டபடி பட்டியலிடுவதற்காக ஒன்பது கட்டங்களை வரைந்து கொள்ளுங்கள். அதில் முதல் கட்டத்தில் முதலில் உங்களது ஜாதகத்தில் சூரியன் நின்ற நட்சத்திரத்தை எழுதுங்கள்.
உதாரணத்திற்கு உங்களுடைய ஜாதகத்தில் சூரியன் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நிற்கிறார் என்றால் முதலில் உத்திரட்டாதி என்று எழுதிக் கொள்ளுங்கள்.
அதனைத் தொடர்ந்து வரிசையாக வரும் நட்சத்திரங்களை மூன்று மூன்றாக அதாவது உத்திரட்டாதி,ரேவதி, அஸ்வினி, என ஒரு கட்டத்திலும், அடுத்த கட்டத்தில் பரணி ,கிருத்திகை ,ரோகிணி -என்றும், ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ச்சியாக மூன்று நட்சத்திரங்களை எழுத வேண்டும்.
27 நட்சத்திரங்களையும் 9 கட்டங்களுக்குள் எழுதி நிறைவு செய்த பின் உங்களுடைய முதல் கட்டத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் உங்கள் ஆயுள் முழுவதும் உதவி செய்யாத நட்சத்திரங்கள்.
இரண்டாவதாக இருக்கும் மூன்று நட்சத்திரங்களான பரணி,கிருத்திகை, ரோகிணி, ஆகிய மூன்று நட்சத்திரங்கள் உங்களுக்கு ஆயுள் முழுவதும் உதவி செய்யும் நட்சத்திரங்கள்.
இதனைத் தொடர்ந்து மூன்றாவது மற்றும் நான்காவது கட்டத்தில் உள்ள நட்சத்திரங்கள் உதவி செய்யாதவை.
ஐந்தாவது கட்டத்தில் இருக்கும் பூரம், உத்திரம், ஹஸ்தம் ஆகிய நட்சத்திரங்கள் உதவி செய்யக்கூடியவை.
அதைத்தொடர்ந்து வரும் ஆறு மற்றும் ஏழு ஆகிய கட்டத்தில் உள்ள நட்சத்திரங்கள் உதவி செய்யாதவை.
இறுதியாக இருக்கும் எட்டு மற்றும் ஒன்பது ஆகிய கட்டங்களில் உள்ள பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, ஆகிய ஆறு நட்சத்திரங்களும் உங்களுக்கு உதவி செய்யக்கூடியவை.
உங்களுடைய ஆயுள் முழுவதும் பரணி, கிருத்திகை ,ரோகிணி, பூரம், உத்திரம், ஹஸ்தம், பூராடம் ,உத்திராடம் ,திருவோணம் ,அவிட்டம் ,சதயம், பூரட்டாதி ,ஆகிய பன்னிரண்டு நட்சத்திரக்காரர்கள் தான் உங்களுக்கு உதவி செய்வார்கள்.
இவர்கள் அனைவரும் ஏககாலத்தில் உதவி செய்வார்களா..! என்பதை விட, நீங்கள் அமைத்துக் கொள்ளும் சூழலுக்கு ஏற்ப ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் உங்களுக்கு ஏதேனும் ஒரு காலகட்டத்தில் உதவிக்கரம் நீட்டுவார்கள்.
இவர்கள் ஆயுள் முழுவதும் உங்களுக்காக உதவி செய்வதற்கு காத்திருப்பவர்கள். இவர்கள் நண்பர்களாகவோ உறவினர்களாகவோ முகம் தெரியாத நபராகவோ இருக்கக் கூடும்.
இவர்களை நீங்கள் ஒருபோதும் பகைத்துக் கொள்ளாமல் நட்பு பாராட்டினால் உங்களுக்கு உதவி செய்வதற்கு தயாராக இருப்பார்கள்.
மேலே குறிப்பிடப்பட்டவை ஒரு உதாரண ஜாதகம். அதேபோல் உங்களுடைய ஜாதக கட்டத்தில் சூரியன் நின்ற நட்சத்திரத்தை எடுத்துக்கொண்டு அதிலிருந்து மூன்று மூன்று நட்சத்திரமாக வகைப்படுத்தி பட்டியலிட வேண்டும்.
அந்த பட்டியலில் இரண்டாமிடம் ,ஐந்தாமிடம் , எட்டாமிடம் , ஒன்பதாமிடம் ஆகியவற்றில் உள்ள நட்சத்திரங்கள் உங்களுக்கு உதவி செய்வதற்கானவை.
சூரியன் என்பது ஆத்ம காரகன் என்பதால் இவர்கள் உங்களுக்கு உதவி செய்ய கடமைப்பட்டவர்கள்.
இவர்களிடமிருந்து எப்படி உதவி பெற வேண்டும் என்பதனை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
தொகுப்பு : சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM