யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொன்விழா ஆண்டு நிகழ்வுகளின் வரிசையாக உலக சுற்றுலா தினத்தினை “சுற்றுலாவும் அமைதியும்" என்ற தொனிப்பொருளில் இந்தியாவின் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்துடன் இணைந்து சிறப்பிக்கும் முகமாக முதல் நாள் ஆரம்ப நிகழ்வுகள், செப்டெம்பர் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி அரங்கில் நடைபெறவுள்ளது.
செப்டெம்பர் 27 - 29ஆம் திகதி காலை 10 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை உணவு மற்றும் கைப்பணிப் பொருள் சந்தை, கலாசாரத் திருவிழா, மாணவர்களின் உணவுச்சந்தை போன்றன யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெறக் காத்திருக்கின்றது.
முதலாம் நாள் நிகழ்வு “சுற்றுலாவும் அமைதியும்“ என்ற தொனிப்பொருளில் ஆய்வரங்காக நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் ஆராத சுருதி உரையினை கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர் பிறேம குமார டி சில்வா அவர்கள் நிகழ்த்தவுள்ளார். மற்றுமொரு ஆராத சுருதி உரையினை Jetwing Symphony குழுமத்தின் தலைவர் கிரான் குரே தரவுள்ளார்.
தொடர்ந்து நடைபெறும் கலந்துரையாடலில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் தலைவரும் பேராசிரியருமான R.C அனு சந்திரன், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சுற்றுலாத்துறைக் கலாநிதி வெங்கட் ராவோ, இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தின் சமூகவியல் கற்கைகளின் தலைவர் கலாநிதி S பத்மநேசன், Airport and Aviation Service SriLanka தனியார் நிறுவனத்தினுடைய சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல் துறைத் தலைவர் சிமித் டி சில்வா கலந்து கொள்ள உள்ளனர்.
இரண்டாம் நாள் நிகழ்வாக இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து வருகை தந்த பேராசிரியர்களால் வடமாகாண சுற்றுலா மற்றும் தொழில்துறை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான தொழில்திறன் மேம்படுத்தல் செயலமர்வுகள் நடைபெற உள்ளன.
மூன்றாம் நாள் நிகழ்வுகளாக கலைநிகழ்வுகளும் பண்பாட்டு அமர்வுகளும் இடம்பெற உள்ளன.
இந்த நிகழ்வுகளுக்கு சமாந்தரமாக செப்ரம்பர் 27ம் திகதி “ 29ம் திகதி வரை காலை 10 மணி தொடக்கம் இரவு 9 மணிவரை சிறிய நடுத்தர முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் கண்காட்சிகளும் சந்தையும் நடைபெற உள்ளன.
அத்தோடு இம் மூன்று நாட்களும் மாலை 6 தொடக்கம் இரவு 9 மணி வரை கைலாசபதி கலையரங்கில் கலை நிகழ்வுகளும் நடைபெற இருக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM