இலங்கை இளையோர் கால்பந்தாட்டத்திற்கு சர்வதேச அரங்கில் தோல்விமேல் தோல்வி

24 Sep, 2024 | 02:36 PM
image

(நெவில் அன்தனி)

ஆசிய தகுதிகாண் கால்பந்தாட்டப் போட்டியில் இலங்கையின் சிரேஷ்ட அணி திருப்திகரமான பெறுபேறுகளை ஈட்டிவரும் நிலையில்  இலங்கையின்  இளையோர் அணிகள் தோல்விமேல் தோல்விகளைத் தழுவி வருகிறது.

இது பெரும் அதிருப்தியைத் தருவதாக இலங்கை கால்பந்தாட்ட விமர்சகர்கள் தெரிவித்தனர்.  

பூட்டானில் நடைபெற்றுவரும் 17 வயதுக்குட்பட்ட தெற்காசிய கால்பந்தாட்ட் சம்பியன்ஷிப்பல் இலங்கை 2 தோல்விகளைத் தழுவியதுடன் தஜிகிஸ்தானில் நடைபெற்றுவரும் 20 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண தகுதிகாண் சுற்றிலும் இலங்கை 2 தோல்விகளைத் தழுவியது. 

20 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண தகுதிகாண் ஈ குழுவுக்கான தனது ஆரம்பப் போட்டியில் வட கொரியாவிடம் கடந்த சனிக்கிழமை 0 - 4 என்ற கோல்கள் கணக்கில் தோல்வி அடைந்த இலங்கை, நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் வரவேற்பு நாடான தஜிகிஸ்தானிடம் 0 - 3 என்ற கோல்கள் கணக்கில் தோல்வி அடைந்தது. 

போட்டி ஆரம்பித்து 2ஆவது நிமிடத்தில் தஜகிஸ்தான் முதலாவது கோலைப் போட்டு இலங்கையை திக்பிரமிப்பில் ஆழ்த்தியது.

அந்த சந்தர்ப்பத்தில் கோல் கம்பத்தில் பட்டு திரும்பி வந்த பந்தை அஸிஸ்பெக் தலீவ் பரிமாற பிலோல் பொபோவ் கோலாக்கினார். 

இடைவேளைக்கான உபாதை ஈடு நேரத்தில் ரஸ்டதம் கம்போலோவ் தாழ்வாக பரிமாறிய பந்தை மஸ்ருர் கஃபுரோவ் கோலாக்கி தஜிகிஸ்தானை 2  - 0 என முன்னிலையில் இட்டார். 

இடைவேளைக்குப் பின்னர் 54ஆவது நிமிடத்தில் தஜிகிஸ்தான் விரர் கஃபுரோவை தனது பெனல்டி எல்லைக்குள் வைத்து மொஹமத் பாதில் முரணான வகையில் வீழ்த்தியதால் பெனல்டி வழங்கப்பட்டது. 

அந்த பெனல்டியை கஃபுரோவ் கோலாக்கி தஜிகிஸ்தானை 3 - 0 என முன்னிலையில் இட்டார்.  

இலங்கை தனது 3ஆவது போட்டியில் ஓமானை நாளையும் கடைசிப் போட்டியில் மலேசியாவை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் எதிர்த்தாடும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆகிய கனிஷ்ட குறிபார்த்து சுடுதலில் இலங்கைக்கு...

2025-02-17 18:05:27
news-image

லாகூர் கோட்டையில் பச்சை மின் விளக்குகளுடன்...

2025-02-17 18:02:20
news-image

பாடசாலை கிரிக்கெட் அபிவிருத்தித் திட்டம் வட ...

2025-02-17 15:23:07
news-image

வீரர்களின் அபார ஆற்றல்களால் இலங்கை அமோக...

2025-02-14 19:11:52
news-image

ஆஸி.யை மீண்டும் வீழ்த்தி தொடரை முழுமையாக...

2025-02-14 00:18:39
news-image

ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய பாகிஸ்தானியர்...

2025-02-13 19:28:02
news-image

கில் அபார சதம், கொஹ்லி, ஐயர்...

2025-02-13 18:17:21
news-image

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண சிறப்பு தூதுவர்களாக...

2025-02-13 17:23:02
news-image

மாலைதீவில் கராத்தே பயிற்சி மற்றும் தேர்வு

2025-02-13 10:26:53
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே பயிற்சி பாசறை

2025-02-13 10:43:37
news-image

சரித் அசலன்க சதம் குவித்து அசத்தல்;...

2025-02-12 18:57:16
news-image

இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்குப் பின்னர் குனேமானின்...

2025-02-12 12:02:33