தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 9 இலங்கை மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

விடத்தல்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் பயன்படுத்திய 3 படகுகள், 5 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், 111 கிலோகிராம் மீன்கள் ஆகியவற்றை கடற்படையினர் பறிமுதல் செய்ததுடன்  மீனவர்களையும் பறிமுதல் செய்த பொருட்களையும் மன்னார் மீன்பிடித்துறை அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைத்துள்ளனர்.