அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போபத்தலாவ மெனிக்பாலம கருப்பன் தையிலம் வனப்பாதுகாப்பு காட்டுப்பகுதியில் நேற்று ஏற்பட்ட காட்டுத்தீயினால் 20 ஏக்கர் எரிந்து நாசமாகியுள்ளதாக அக்கரபத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர இன்று நுவரெலியா இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் இராணுவம், பொது மக்கள் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முயற்சி செய்து வருகின்றனர்.

இத் தீ காரணமாக எமது நாட்டுக்கே உரித்தான அரிய வகை மூலிகைகள், பெறுமதிமிக்க மரவகைகள், உட்பட ஊர்ந்து செல்லும் பிராணிகள் முயல், மான் போன்ற  சாதுவான மிருகங்கள் ஆகியன கொள்ளப்பட்டிருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகின்றன.