சகல ஐஸ்வரியத்தையும் வழங்கும் பிரத்யேக தீப வழிபாடு..!?

Published By: Digital Desk 2

23 Sep, 2024 | 10:16 PM
image

இன்றைய சூழலில் எம்மில் பலரும் தங்களது வாழ்க்கையில் கடன் சுமையுடன் இருப்பார்கள். சிலர் நினைத்த காரியம் நடக்கவில்லையே என்ற கவலையுடன் திரிவார்கள். 

சிலர் தங்களது சொந்த வாழ்க்கையில் எதுவும் நினைத்தபடி நடக்கவில்லையே என்ற கவலையுடன் காலத்தை கழித்து கொண்டிருப்பார்கள்.‌

 இதற்காக சோதிட நிபுணர்களிடம் சென்று ஆலோசனை கேட்டால்  அவர்கள் தீப வழிபாட்டை மேற்கொள்ளுமாறு தெரிவிப்பார்கள்.

ஆனால் தீப வழிபாட்டிலும் பல்வேறு கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் இருப்பதாகவும் இருப்பதாகவும் அதனை முழுமையாக கடைப்பிடிக்கும் போது தான் உங்களுக்கான முழுமையான பலன் கிடைக்கும் என்றும் ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள்.

நீங்கள் ஆலயத்தில் தீப வழிபாட்டை மேற்கொள்வதாக இருந்தால் உங்களுடைய வயது என்னவோ அந்த வயதின் எண்ணிக்கையை விட ஒரு தீபத்தை அதிகமாக ஏற்றி வழிபட வேண்டும்.

அதிலும் திருமணத்தடை, புத்திர பாக்கிய பேறு குறித்த பரிகாரத்திற்காக  தீபத்தை ஏற்றும் போது 27 நட்சத்திரங்களின் எண்ணிக்கையில் 27 தீபத்தையோ அல்லது 108 தீபத்தையோ ஏற்றி வழிபட வேண்டும்.

அதேபோல் சோதிடர் உங்களுக்கு எலுமிச்சை, தேங்காய் ,பூசணிக்காய் , போன்ற பிரத்யேகமாக தீபத்தை ஏற்றி வழிபட வேண்டும் என அறிவுறுத்தி இருந்தால் இதனை நீங்கள் பரிகார ஆலயத்தில் காலை வேளையில் தான் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் இதன் போது செக்கில் ஆட்டப்பட்ட நல்லெண்ணையை பயன்படுத்த வேண்டும். மேலும் சாதாரண திரிகளை பயன்படுத்துவதை விட தாமரைத் தண்டு திரிகளை பயன்படுத்தினால் கூடுதல் பலன் கிடைக்கும்.

அதே தருணத்தில் நீங்கள் ஆலயத்திற்கு சென்று தீப வழிபாட்டை மேற்கொள்பவராக இருந்தால் மூலவர் எந்த திசை நோக்கி நின்று அருள் பாலிக்கிறாரோ அந்த திசையில் தீபத்தின் ஒளி இருக்கும்படி தீபத்தை ஏற்ற வேண்டும்.

அதே தருணத்தில் தீபத்தின் முகம் தெற்கு திசையில் இருக்கும் வகையில் ஏற்றக்கூடாது.

அதே தருணத்தில் நீங்கள் கடன் நிவாரணத்திற்காக ஆலயத்தில் தீபம் ஏற்றி வழிபட தொடங்கினால் உங்களுடைய தீபங்களின் எண்ணிக்கை 19 என்ற எண்ணிக்கையில் இருக்கும் வகையில் இடம்பெற வேண்டும்.

மேலும் அந்த விளக்கினை மேற்கு திசை நோக்கி ஒளிரும்படி வைத்து பிரார்த்தனை செய்ய வேண்டும். இதனால் கடன் நிவாரணத்திற்கான பலன் கிடைக்கும்.

நீங்கள் தன வரவு, பண வரவு குறித்து நினைத்த காரியம் செயல்பட வேண்டும் என்றால் ஆலயத்திற்குச் சென்று நெய் தீபம் ஏற்ற வேண்டும்.

அதிலும் மூன்று, ஒன்பது, 27 ஆகிய எண்ணிக்கையில் நெய் தீபத்தை ஏற்றி வழிபட வேண்டும்.

அத்துடன் இத்தகைய வழிபாட்டினை வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக 21 வெள்ளிக்கிழமை அல்லது 21 நாட்கள் தொடர்ந்து நெய் தீபம் ஏற்றினால் உங்களுடைய தன வரவு குறித்த தீப வழிபாடு பலன் அளிக்கும்.

அரசாங்கம் தொடர்பான காரியங்களில் வெற்றி கிடைக்க வேண்டும் என்றால் நீங்கள் ஆலயத்திற்கு சென்று ஒன்று, மூன்று, ஐந்து, ஒன்பது ஆகிய எண்ணிக்கையில் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

அதீத தனவரவு அதாவது லட்சங்களில் உங்களுடைய பண தேவைகள் இருக்கும்போது அதற்கான பரிகார வழிபாட்டை ஆலயத்தில் மேற்கொள்ளும் போது நெய் தீபத்தை வடக்கு திசை நோக்கி ஏற்றி வழிபட வேண்டும்.

ஏனெனில் வடக்கு திசை என்பது குபேரனின் திசையாகும். மேலும் வெள்ளிக் கிழமைகளிலும், ஞாயிற்றுக் கிழமைகளிலும் இத்தகைய வழிபாட்டை தொடர்ச்சியாக மேற்கொள்வதன் மூலம் உரிய பலன் கிடைக்கும்.

தீப வழிபாடு என்பது பழமையான பரிகாரம் என்பதை விட வலிமையான மற்றும் எளிமையான பரிகாரம் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

சுத்தமான நல்லெண்ணெய் மற்றும் சுத்தமான பசு நெய் விட்டு தீபம் ஏற்றி வழிபடும் போதுதான் அவை முழுமையான பலன் தரும் என்பதையும் மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

தொகுப்பு : சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண வரவை அதிகரிப்பதற்கான எளிய வாழ்வியல்...

2024-10-12 18:08:24
news-image

பண வரவை அதிகரிப்பதற்கான பிரத்யேக குபேர...

2024-10-12 08:46:23
news-image

நீச்சமடைந்த கிரகங்களுக்குரிய வாழ்வியல் பரிகாரம்...?

2024-10-09 17:13:33
news-image

திடீர் அதிர்ஷ்டம் கிடைப்பதற்கான சூட்சமமான வழிபாடு...!!?

2024-10-08 17:13:01
news-image

இல்லங்களில் சகல ஐஸ்வரியங்களும் தங்குவதற்கான எளிய...

2024-10-07 15:06:17
news-image

சுக்கிர பகவானின் வலிமையை அதிகரித்துக் கொள்வதற்கான...

2024-10-05 21:38:45
news-image

அதிக நன்மைகளை அள்ளித் தரும் பாணலிங்கம்

2024-10-04 18:33:02
news-image

தீய சக்திகள் விலகுவதற்கான எளிய வழிமுறைகள்..?

2024-10-03 16:20:27
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் கண்...

2024-10-03 17:10:09
news-image

பாலாரிஷ்ட தோஷத்தை அகற்றும் சப்த கன்னிமார்...

2024-10-01 16:59:14
news-image

ஒக்டோபர் மாத ராசி பலன்கள் 2024

2024-09-30 18:10:05
news-image

வருவாய், வருமானம் அதிகரிப்பதற்கான சூட்சம வழிமுறைகள்...!?

2024-09-30 16:53:33