எம்மில் அனைவரும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்காக திட்டமிட்டும், திட்டமிடாமலும் உழைத்துக் கொண்டிருப்பர்.
பலருக்கு வெற்றியும் சிலருக்கு எதிர்பார்த்த அளவிற்கான வெற்றி கிடைக்காமலும் இருக்கும்.
இருப்பினும் எம்முடைய வாழ்க்கை பயணம் முழுவதும் வெற்றியை நோக்கியதாகவே இருக்கும். ஏனெனில் வெற்றி என்பது கடந்து வந்த பாதையின் பொருளை அர்த்தத்தை அடுத்தவருக்கு உணர்த்துவது.! மேலும் வெற்றி என்பது மனதிற்கு மகிழ்ச்சியை அளிப்பதுடன் அடுத்தவர்களையும் அவருடைய பாதையில் பயணிக்க தூண்டுகோலாக அமைவது.! வெற்றி என்பது கடுமையாக உழைத்து அதனூடாக சூட்சுமத்தை கண்டறிவது என்றும் குறிப்பிடலாம்.
இந்நிலையில் எம்மில் பலரும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு சில எளிய பரிகாரங்களே போதுமானது என்று எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து 27 நட்சத்திரக்காரர்களும் நீங்கள் பிறந்த ஜென்ம நட்சத்திர தினத்தன்று எதனை மேற்கொண்டால் அல்லது எதனை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தால் சூட்சுமமான முறையில் வெற்றியை தொடலாம் என்பதை என்பதை முன்னோர்கள் எடுத்துரைத்திருக்கிறார்கள்.
அதற்கான நட்சத்திர பட்டியலை கீழே காண்போம்.
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அல்லது நாளாந்தம் அல்லது அஸ்வினி நட்சத்திர தினத்தன்று முருங்கை மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வாருங்கள்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆல மரத்திற்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அல்லது நாளாந்தம் அல்லது பரணி நட்சத்திர தினத்தன்று தண்ணீர் ஊற்றி வாருங்கள்.
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எலுமிச்சை மரத்திற்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அல்லது நாளாந்தம் அல்லது கார்த்திகை நட்சத்திர தினத்தன்று தண்ணீர் ஊற்றி வாருங்கள்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காளை மாட்டிற்கு அகத்தி கீரையை உணவாக வழங்கி வாருங்கள்.
இதனை நாளாந்தமும் வழங்கலாம். வாரம் ஒரு முறையும் வழங்கலாம் அல்லது வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வழங்கலாம் அல்லது குறைந்த பட்சம் ரோகிணி நட்சத்திர தினத்தன்று தவறாது வழங்குங்கள்.
மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கோதுமை மற்றும் கோதுமையினால் தயாரிக்கப்பட்ட உணவினை தானமாக வழங்க வேண்டும்.
அதாவது கோதுமை பாயாசம், கோதுமை அல்வா, கோதுமை பாண், சப்பாத்தி, பூரி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையினதான உணவை தயாரித்து அதனை தானமாக வழங்கி வந்தால் வாழ்க்கையில் மாற்றம் நிகழும். இல்லையென்றால் மிருகசீரிஷ நட்சத்திர தினத்தன்று இதனை வழங்கினால் மாற்றம் நிகழும்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உங்கள் வீட்டிற்கு அருகே அல்லது ஆலயத்தில் இருக்கும் அல்லது நீங்கள் பயணிக்கும் போது தென்படும் வில்வ மரத்திற்கு தொடர்ச்சியாக தண்ணீர் ஊற்றி வாருங்கள் அல்லது திருவாதிரை நட்சத்திர நாளன்று ஏற்கனவே தெரிவு செய்து வைத்திருக்கும் வில்வ மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வாருங்கள்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தேனை தானம் செய்ய வேண்டும். அதாவது தேனாகவும் தானம் செய்யலாம் அல்லது அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதற்கு கூட தேனை தானமாக வழங்கலாம்.
பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களுக்கு கல்வியை கற்பித்த ஆசிரிய பெருமக்களுக்கு வஸ்திர தானம் வழங்க வேண்டும்.
ஆசிரியர் என்றால் அவர் பாடசாலையில் தொடக்கத்தில் இருந்து கற்பித்த ஆசிரியராகவும் இருக்கலாம் அல்லது உயர்கல்வியில் வழிகாட்டியாக திகழ்ந்த ஆசிரியராகவும் இருக்கலாம்.
ஆனால் அவர்கள் ஆசிரியர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்கு அவர்கள் விரும்பும் வகையினதான வஸ்திரத்தை தானமாக வழங்கும் போது உங்களது வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அல்லது சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேய பெருமாளை வழிபட வேண்டும்.
ஆஞ்சநேய பெருமாளை வழிபட வழிபட வாழ்க்கையில் சுமைகள் குறைந்து இன்பம் அதிகரிப்பதை காணலாம்.
அதிலும் குறிப்பாக ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று ஆஞ்சநேயரை தரிசிக்க வேண்டும்.
மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மும்மூர்த்தி தலம் எனப் போற்றப்படும் தலங்களுக்கு சென்று மும்மூர்த்திகளை வழிபட வேண்டும். மும்மூர்த்திகள் என்றால் சிவன் பிரம்மா விஷ்ணு என்பதை நீங்களே அறிவீர்.
பூரம் நட்சத்திர பிறந்தவர்கள்.. அரச மரத்தடி விநாயகருக்கு அருகம்புல் மாலையை சாற்றி வழிபட வழிபட வாழ்க்கை முன்னேறும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கேட்பதில் சவால் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்ய வேண்டும். அதாவது செவிடர்களுக்கு அவர்கள் விரும்பும் வகையிலான உதவியை மேற்கொண்டால் மாற்றங்கள் நிகழும்.
ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பசுவிற்கு அகத்தி கீரையை உணவாக வழங்கிட வேண்டும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் திகதியன்று அண்டை நாடான இந்தியாவில் குறிப்பாக தென்னகத்தில் இருக்கும் ஸ்ரீரங்கத்திற்கு சென்று ஸ்ரீரங்கநாத பெருமானையும், தாயாரையும் தரிசிக்க வேண்டும்.
தமிழகம் சென்று தரிசிக்க வாய்ப்பு இல்லாதவர்கள் இணையதளத்தில் சித்திரை நட்சத்திர தினத்தன்று ஸ்ரீரங்கம் பெருமாள் தொடர்பான பதிவுகளை பயபக்தியுடன் பார்வையிட்டு வழிபடலாம்.
மேலும் ஸ்ரீரங்க ரங்கநாத பெருமாள் புகைப்படத்தை வீட்டில் வைத்தும் சித்திரை நட்சத்திர தினத்தன்று பிரத்யேகமாக வழிபடலாம் அல்லது அருகில் உள்ள பெருமாள் ஆலயத்தில் ஸ்ரீரங்கநாத பெருமாள் தனி சன்னதியில் வீற்றிருந்தால் அங்கும் சென்றும் வழிபடலாம்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடர்ந்து அல்லது வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் காளியை வழிபட வேண்டும். குறிப்பாக சுவாதி நட்சத்திர தினத்தன்று காளியை வழிபட வேண்டும்.
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அருகில் இருக்கும் ஆலயத்திற்கு எண்ணெய் தானத்தை வழங்க வேண்டும். அதிலும் குறிப்பாக விசாக நட்சத்திரத் தினத்தன்று எண்ணெய் தானத்தை வழங்குவது சிறப்பு.
அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மாமரத்திற்கு மஞ்சள் கலந்த நீரை ஊற்றி வர வேண்டும். அனுஷ நட்சத்திர தினத்தன்று இதனை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேப்ப மரத்திற்கு மஞ்சள் கலந்த நீரை ஊற்றி வர வேண்டும். கேட்டை நட்சத்திர தினத்தன்று இதனை அவசியம் மேற்கொள்ள வேண்டும்.
மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காலணி தைக்கும் தொழிலாளிக்கு உதவி செய்திட வேண்டும். இவர்களுக்கு உணவு தானம், நலத்திட்ட உதவி, நன்கொடை ஆகியவற்றை வழங்கி ஆதரித்தால் உங்கள் வாழ்க்கை மேம்படும்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முடி மழிக்கும் தொழிலை செய்பவர்களுக்கு உதவி செய்திட வேண்டும்.
சிகை கலைஞர்கள் முகச்சவரம் செய்பவர்கள் ஆகியோருக்கும் உதவிடலாம். இவர்களுக்கும் பூராடம் நட்சத்திர தினத்தன்று உதவிகள் செய்தால் வாழ்க்கை மேம்படும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திராடம் நட்சத்திர தினத்தன்று துர்க்கை அம்மனை வழிபட வேண்டும்.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவோணம் நட்சத்திர தினத்தன்று கிரி வலத்தை மேற்கொள்ள வேண்டும். கிரிவலம் என்ற உடன் திருவண்ணாமலை ஸ்தலத்தில் மட்டும் தான் மேற்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை.
உங்கள் ஊர் அருகே ஏதேனும் கிரிவலம் வருவதற்கான வாய்ப்புகள் இருந்தால் அங்கும் கிரிவலம் மேற்கொண்டால் பலன் கிடைக்கும்.
கிரிவலம் என்று சொன்னவுடன் எம்மில் சிலர் பௌர்ணமி , அமாவாசை என ஆகிய நாள்களில் தானே மேற்கொள்ள வேண்டும் என சந்தேகம் எழுப்புவர்.
ஆனால் திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவர்களுடைய ஜென்ம நட்சத்திரம் தினத்தன்று அருகில் இருக்கும் ஆலயத்தில் கிரிவலப் பாதை இருந்தால் அங்கு கிரிவலம் சென்றால் வாழ்க்கையில் மாற்றம் நிகழும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். பேசுவதற்கு சவால் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிட வேண்டும்.
அதாவது ஊமையாக இருப்பவர்களுக்கு உதவி செய்திட வேண்டும். இதனை அவிட்டம் நட்சத்திர தினத்தன்று மேற்கொண்டால் கூடுதல் பலன் கிடைக்கும்.
சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று அங்கு சிவபெருமானுக்கு சதய நட்சத்திர தினத்தன்று இளநீர் அபிஷேகம் செய்ய வேண்டும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீதியோர நாய்களுக்கு உணவிட வேண்டும். வீதியோர நாய்களுக்கு நாளாந்தம் உணவை வைக்கலாம். வாய்ப்பு கிடைக்காதவர்கள் பூரட்டாதி நட்சத்திர தினத்தன்று கட்டாயமாக நாய்க்கு உணவிட்டால் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாய்ப்பில்லாமல் வாடும் சமையல் கலைஞர்களுக்கு அல்லது சமையல் கலைஞர்களுக்கு உதவி செய்திட வேண்டும். அதிலும் குறிப்பாக உத்திரட்டாதி நட்சத்திர தினத்தன்று செய்தால் கூடுதல் பலன் கிடைக்கும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அரச மரத்திற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும் . அதிலும் குறிப்பாக ரேவதி நட்சத்திர தினத்தன்று தண்ணீர் ஊற்றினால் லாபம் கிடைக்கும். கஷ்டம் மறையும்.
எம்முடைய முன்னோர்களும், சாஸ்திரங்களும் குறிப்பிட்டிருக்கும் எளிய வாழ்வியல் பரிகாரத்தை தொடர்ச்சியாக அந்த நட்சத்திர தினத்தன்று மேற்கொள்ளும் போது ஓராண்டிற்குள் உங்களது வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டு, முன்னேற்றங்கள் உண்டாவதை அனுபவத்தில் காணலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM