நடிகர் கார்த்தி வெளியிட்ட மகத் ராகவேந்திராவின் 'காதலே காதலே' திரைப்பட கிளர்வோட்டம்

Published By: Digital Desk 2

23 Sep, 2024 | 05:06 PM
image

நடிகர் மகத் ராகவேந்திரா காதல் இளவரசனாக நடித்திருக்கும் 'காதலே காதலே' எனும் திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் ஆர். பிரேம்நாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'காதலே காதலே' எனும் திரைப்படத்தில் மகத் ராகவேந்திரா, மீனாட்சி கோவிந்தராஜன், இயக்குநர் இமயம் பாரதிராஜா, வி டி வி கணேஷ், ரவீனா ரவி, ராஜ் ஐயப்பா, ஸ்ரீஜா, வி ஜே ஆஷிக், அக்ஷதா, பர்வேஷ், அத்வைத், அன்ஷிதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சுதர்சன் கோவிந்தராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தை ஸ்ரீ வாரி ஃபிலிம் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. ரங்கநாதன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய இறுதிக்கட்ட மற்றும் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கதையின் நாயகனான மகத் பெண்களை காதலித்து, காமுகித்து, பின்னர் கைவிடும் இளைஞனாக தோன்றுவதும் அவரை காதலித்து, கரம் பிடிக்கும் காதலியாக நாயகி தோன்றுவதும் படத்தை பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் சென்னை - திரைப்பட விமர்சனம்

2024-12-13 17:39:31
news-image

ஒன்ஸ் அபான் ஏ டைம் இன்...

2024-12-13 17:39:50
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ரசிகர்களுக்கு பிறந்தநாள்...

2024-12-13 17:40:04
news-image

விவசாயிகளின் அவல நிலையை உரக்கப் பேசும்...

2024-12-13 17:37:27
news-image

சென்னையில் தொடங்கிய 22 ஆவது சென்னை...

2024-12-13 17:03:25
news-image

மோகன்லால் இயக்கி நடிக்கும் 'பரோஸ்' திரைப்படத்தின்...

2024-12-13 16:54:00
news-image

கோலாகலமாக நடைபெற்ற நடிகை கீர்த்தி சுரேஷின்...

2024-12-13 17:36:38
news-image

“புஷ்பா 2” பட வெளியீட்டில் கூட்டத்தில்...

2024-12-13 17:11:43
news-image

தனுஷ் இயக்கும் ' நிலவுக்கு என்...

2024-12-12 15:38:08
news-image

இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்ட 'அறிவான்'...

2024-12-12 15:38:42
news-image

ரட்சிதா மகாலட்சுமி நடிக்கும் 'எக்ஸ்ட்ரீம்' படத்தின்...

2024-12-11 17:37:18
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட நடிகர்...

2024-12-11 17:04:42