உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகள் நிலையில் இலங்கை மூன்றாம் இடத்துக்கு முன்னேறியது

23 Sep, 2024 | 01:22 PM
image

(நெவில் அன்தனி)

நியூஸிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை (23) காலை நிறைவடைந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 63 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இலங்கை, ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2023 - 2025 பருவகாலத்திற்கான அணிகள் நிலையில் 3ஆம் இடத்திறகு முன்னேறியுள்ளது.

இதன் மூலம் தற்போது அணிகள் நிலையில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியாவுக்கும் நடப்பு உலக சம்பியன் அவுஸ்திரேலியாவுக்கும் சவால் விடுக்கும் வகையில் இலங்கை முன்னேறியுள்ளது.

இந்த வெற்றி மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை 1 - 0 என முன்னிலை பெற்றுள்ளது.

காலி சர்வதேச விளையாட்டரங்கில் இலங்கை தனது 26ஆவது வெற்றியை ஈட்டியதுடன் இந்த மைதானத்தில் நியூஸிலாந்து 5ஆவது தொடர்ச்சியான தோல்வியைத் தழுவியது.

போட்டியின் கடைசி நாளான இன்றைய தினம் வெற்றிக்கு மேலும் 68 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் 8 விக்கெட் இழப்புக்கு 207 ஓட்டங்களிலிருந்து நியூஸிலாந்து தனது 2ஆவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது.

ரச்சின் ரவிந்த்ரா 91 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்ததால் நியூஸிலாந்துக்கு சிறு நம்பிக்கை இருந்தது.

ஆனால், கடைசி நாள் ஆட்டம் இன்று திங்கட்கிழமை (23)காலை தொடர்ந்தபோது 15 நிமிடங்களில் கடைசி 2 விக்கெட்களை ப்ரபாத் ஜயசூரிய வீழ்த்த இலங்கை வெற்றிபெற்றது.

ரச்சின் ரவிந்த்ரா மேலதிகமாக ஒரு ஓட்டத்தைப் பெற்று ப்ரபாத் ஜயசூரியவின் பந்துவீச்சில் எல். பி. டபிள்யூ. முறையில் 92 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததும் இலங்கை வெற்றிபெறுவது உறுதியாயிற்று.

மொத்த எண்ணிக்கை 211 ஓட்டங்களாக இருந்தபோது வில்லியம் ஓ'ரூக் கடைசியாக ஆட்டம் இழந்தார்.

மிகவும் துல்லியமாக பந்துவீசிய ப்ரபாத் ஜயசூரிய தனது 15ஆவது டெஸ்ட் போட்டியில் 8ஆவது 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்ததுடன் இந்தப் போட்டியில் 9 விக்கெட்களை மொத்தமாக கைப்பற்றினார்.

முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் மூன்று நாட்களில் இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்டதுடன் நான்காம் நாள் ஆட்டத்தின் பிற்பகுதியிலேயே இலங்கைக்கு சாதகமாக திரும்பியது.

இலங்கை சார்பாக கமிந்து மெண்டிஸ், திமுத் கருணாரட்ன, தினேஷ் சந்திமால், ஏஞ்சலோ மெத்யூஸ், குசல் மெண்டிஸ் ஆகியோர் துடுப்பாட்டத்திலும் ப்ரபாத் ஜயசூரிய, ரமேஷ் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா ஆகியோர் பந்துவீச்சிலும் பிரகாசித்தனர்.

நியூஸிலாந்து சார்பாக டொம் லெதம், கேன் வில்லியம்சன், டெரில் மிச்செல், ரச்சின் ரவிந்த்ரா, க்லென் பிலிப்ஸ் ஆகியோர் துடுப்பாட்டத்திலும் வில்லியம் ஓ'ரூக், அஜாஸ் பட்டேல் ஆகியோர் பந்துவீச்சிலும் பிரகாசித்தனர்.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இதே மைதானத்தில் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

எண்ணிக்கை சுருக்கம்

இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 305 (கமிந்து மெண்டிஸ் 114, குசல் மெண்டிஸ் 50, ஏஞ்சலோ மெத்யூஸ் 36, தினேஷ் சந்திமால் 30, வில்லியம் ஓ'றூக் 55 - 5 விக்.)

நியூஸிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 340 (டொம் லெதம் 70, டெரில் மிச்செல் 57, கேன் வில்லியம்சன் 55, க்லென் பிலிப்ஸ் 49 ஆ.இ., ப்ரபாத் ஜயசூரிய 136 - 4 விக்., ரமேஷ் மெண்டிஸ் 101 - 3 விக்., தனஞ்சய டி சில்வா 31 - 2 விக்.)

இலங்கை 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 309 (திமுத் கருணாரட்ன 83, தினேஷ் சந்திமால் 61, ஏஞ்சலோ மெத்யூஸ் 50, தனஞ்சய டி சில்வா 40, அஜாஸ் பட்டேல் 90 - 6 விக்.)

நியூஸிலாந்து (வெற்றி இலக்கு 275) 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 211 (ரச்சின் ரவிந்த்ரா 92, கேன் வில்லியம்சன் 30, டொம் ப்ளண்டெல் 30, ப்ரபாத் ஜயசூரிய 68 - 5 விக்., ரமேஷ் மெண்டிஸ் 83 - 3 விக்.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நெதர்லாந்தை 93 ஓட்டங்களால் இலகுவாக வென்றது...

2026-02-13 23:06:26
news-image

கடுமையாக போராடி கனடாவை வெற்றிகொண்டது ஐக்கிய...

2026-02-13 21:04:04
news-image

அவுஸ்திரேலியாவை திக்குமுக்காடவைத்து வெற்றிகொண்டு வரலாறு படைத்தது...

2026-02-13 16:47:36
news-image

2026 உலக விமான சேவை கிரிக்கெட்...

2026-02-13 16:08:54
news-image

அவுஸ்திரேலியாவுக்கு 170 ஓட்டங்களை வெற்றி இலக்காக...

2026-02-13 15:50:31
news-image

நமிபியாவை ஓட்டங்களால் வென்றது இந்தியா; ஏ...

2026-02-12 23:28:27
news-image

ரி20 உலகக் கிண்ணத்தில் சகோதரர்கள் இணைப்பாட்ட...

2026-02-12 22:29:28
news-image

சர்வதேச ரி20இல் சொந்த மண்ணில் அதிகூடிய...

2026-02-12 15:29:40
news-image

ஓமானுடனான போட்டியில் இலங்கை 225 -...

2026-02-12 13:16:04
news-image

இலங்கை - ஓமான் ரி20 உலகக்...

2026-02-12 11:26:01
news-image

முன்னாள் சம்பியன்களுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்தை...

2026-02-12 03:27:36
news-image

அயர்லாந்துக்கு எதிரான ரி20 உலகக் கிண்ணப்...

2026-02-11 19:32:23