சைட்டத்திற்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் பல்கலைக்கழக வைத்திய பீட மாணவர்களால் நேற்றிரவு கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டுள்ளன.

சைட்டத்திற்கு எதிராகவே பல்கலைக்கழக வைத்திய பீட மாணவர்களால் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது.