வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் இரத பவனி நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ நடைபெற்றது.
இலங்கையில் உள்ள பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் தானே லிங்கம் தோன்றி எழுப்பப்பட்ட ஆலயங்களில் ஒன்றாகவும் கருதப்படும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 04ஆம் திகதி அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையில் இந்த உற்சவம் நடைபெற்றது.
கல்நந்தி புல்லுண்டு போர்த்துக்கீசரை உதைத்து கல்லாகிய அற்புத திருத்தலமாக திகழ்ந்துகொண்டிருக்கும் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் ஆலயமானது கிழக்கு மாகாணத்தின் தேரோடும் ஆலயம் என்னும் பெருமையினையும் கொண்டதாக விளங்குகிறது.
கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவத்தின் தேர்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை 04 மணிக்கு நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல நூற்றாண்டு கால பழைமை வாய்ந்த மரச்சில்லுகளால் உருவாக்கப்பட்ட இரண்டு தேர்கள் முறையே விநாயகர் தேர் , சித்திரத்தேர் வடம் பூட்டி ஆண் அடியார்களால் மட்டும் ஆலய வெளி வீதியில் முற்றும் மணல் தரையில் பக்திபூர்வமாக இழுக்கப்படுவது வேறெந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பம்சமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM