(நா.தனுஜா)
இலங்கைத் தமிழரசுக்கட்சி ஆதரவளித்த ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ வட, கிழக்கின் 5 தேர்தல் மாவட்டங்களிலும்; மொத்தமாக 676,681 எனும் அதிகூடிய வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கின்றார்.
நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது எனும் விடயத்தில் வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் மாறுபட்ட நிலைப்பாடுகளை எடுத்திருந்தன. அதன்படி இலங்கைத் தமிழரசுக்கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்திருந்தது.
அதற்கமைய இம்முறை தேர்தலில் வடக்கின் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டங்களில் 216,599 வாக்குகளையும், கிழக்கின் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் திகாமடுல்லை தேர்தல் மாவட்டங்களில் 460,082 வாக்குகளையும் பெற்றதன் மூலம் சஜித் பிரேமதாஸ வட, கிழக்கு மாகாணங்களில் மொத்தமாக 676,681 வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.
வட, கிழக்கு மாகாணங்களில் சஜித் பிரேமதாஸ பெற்ற வாக்குகளை தேர்தல் மாவட்ட ரீதியாக நோக்குகையில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 121,177 வாக்குகளையும், வன்னி தேர்தல் மாவட்டத்தில் 95,422 வாக்குகளையும், திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் 120,588 வாக்குகளையும், மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் 139,110 வாக்குகளையும், திகாமடுல்லை தேர்தல் மாவட்டத்தில் 200,384 வாக்குகளையும் பெற்றிருக்கிறார். அவர் பெற்ற இவ்வாக்குகள் செல்லுபடியான வாக்குகளில் முறையே 32.60, 43.92, 50.36, 43.66, 47.33 சதவீதமாகும்.
இவ்வனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் சஜித் பிரேமதாஸ முன்னிலை வகிக்கும் அதேவேளை, யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் அரியநேத்திரன், ரணில் விக்ரமசிங்க, அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் முறையே 2 ஆம், 3 ஆம், 4 ஆம் இடங்களிலும், வன்னி தேர்தல் மாவட்டத்தில் ரணில் விக்ரமசிங்க, அரியநேத்திரன், அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் முறையே 2 ஆம், 3 ஆம், 4 ஆம் இடங்களிலும் உள்ளனர்.
அதேபோன்று திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் அநுரகுமார திஸாநாயக்க, ரணில் விக்ரமசிங்க, அரியநேத்திரன் ஆகியோர் முறையே 2 ஆம், 3 ஆம், 4 ஆம் இடங்களிலும், மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் ரணில் விக்ரமசிங்க, அநுரகுமார திஸாநாயக்க, அரியநேத்திரன் ஆகியோர் முறையே 2 ஆம், 3 ஆம், 4 ஆம் இடங்களிலும், திகாமடுல்லை தேர்தல் மாவட்டத்தில் அநுரகுமார திஸாநாயக்க, ரணில் விக்ரமசிங்க, அரியநேத்திரன் ஆகியோர் முறையே 2 ஆம், 3 ஆம், 4 ஆம் இடங்களிலும் இருக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM