சஜித்தின் வெற்றிக்காக கடினமாக உழைத்தோம்; பதவி காலம் ஆக்கபூர்வமானதாக அமைய அநுரவுக்கு வாழ்த்துக்கள் - ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்கள்

Published By: Vishnu

23 Sep, 2024 | 04:39 AM
image

(எம்.மனோசித்ரா)

சஜித் பிரேமதாசவுக்காக நாங்கள் கடுமையாக பிரச்சாரம் செய்தோம். ஆனால் அது நடக்கவில்லை. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுர திஸாநாயக்க பதவியேற்பார் என்பது தற்போது தெளிவாகியுள்ளது. ஜனநாயகம் மற்றும் நல்லெண்ணத்தின் உணர்வில் நான் எனது நண்பருக்கு கடினமான பாதையில் சிறந்து விளங்க வாழ்த்துகின்றேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை (22) வெளியான நிலையில் அவர் தனது எக்ஸ் தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதே வேளை பாராளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத்தும் தனது நிலைப்பாட்டை எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கின்றார்.

'ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின பிரச்சாரப் பாதையில் எனது அணியுடன் அயராது உழைத்தேன். எங்களின் முயற்சிகள் எமக்கு வலுவான இரண்டாம் இடத்தைப் பெற்றுத் தந்துள்ளன. அனுரகுமார திஸாநாயக்க நாடு முழுவதிலும் உள்ள வாக்காளர்கள் மற்றும் முக்கிய மாவட்டங்களில் வெற்றி பெற்றுள்ளார்.

அரசியல் கருத்துக்களில் நாம் வேறுபட்டாலும், ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுர திஸாநாயக்கவின் வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சவாலான காலங்களில் அவர் தேசத்தை வழிநடத்திச் செல்லும் வகையில் ஆக்கப்பூர்வமான பதவிக்காலம் அவருக்கு அமைய வாழ்த்துகள்.' என அவர் குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லசந்த விக்கிரமதுங்க படுகொலை விசாரணை சுருக்கத்தை; ...

2025-02-10 02:02:13
news-image

இழப்புக்களை ஏற்படுத்த தூண்டியவர்களை இனங்கண்டுள்ளோம்; அவர்களுக்கெதிராக...

2025-02-10 01:54:10
news-image

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்தடை ...

2025-02-10 01:46:26
news-image

எந்தவொரு வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்...

2025-02-09 15:15:31
news-image

பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு இன்றேல் நிச்சயம் நாட்டுக்கு...

2025-02-09 15:22:37
news-image

ஜனாதிபதி நீதித்துறை கட்டமைப்பில் தலையீடு செய்யப்போவதில்லை...

2025-02-09 19:41:29
news-image

Clean sri lanka நிகழ்ச்சித் திட்டம்...

2025-02-09 23:19:15
news-image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே மோதல்...

2025-02-09 22:25:18
news-image

பா.உறுப்பினர்கள்122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக்கொண்டமை...

2025-02-09 17:13:39
news-image

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு...

2025-02-09 17:28:01
news-image

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும்...

2025-02-09 19:55:46
news-image

எம்.பிக்களுக்கு 122 கோடி ரூபா இழப்பீடு...

2025-02-09 17:19:20