(நெவில் அன்தனி)
பூட்டான் தலைநகர் திம்புவில் நடைபெற்றுவரும் 17 வயதுக்குட்பட்ட சாவ் சம்பியன்ஷிப் கால்பந்தாட்டப் போட்டியில் பூட்டானிடம் இலங்கை தோல்வி அடைந்த 20 வயதுக்குட்ட இலங்கை அணி வட கொரியாவிடம் தோல்வி அடைந்தது.

இந்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை மொசமான தோல்விகளைத் தழுவியது.
17 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்டத்தில் பூட்டானிடம் 1 - 5 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை தோல்வி அடைந்தது.

தொடர்ந்து தஜிகிஸ்தானின் டுஷான்பேயில் நடைபெற்றுவரும் 20 வயதுக்குட்பட்ட AFC ஆசிய கிண்ண 2025 தகுதிகாண் ஈ குழு போட்டியில் வட கொரியாவிடம் 0 - 4 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலக்கை தோல்வி அடைந்தது.

போட்டியின் முதலாவது பகுதியில் வட கொரியாவை ஒரு கோலுக்கு கட்டுப்படுத்திய இலங்கை, இரண்டாவது பகுதியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 கோல்களை தாரைவார்த்தது.

அப் போட்டியில் வட கொரியாவின் முன்கள வீரர் ரி ஜொங் டொக், ஹெட் - ட்ரிக் முறையில் கோல்களைப் போட்டு அசத்தினார். அவர் அந்த 3 கோல்களையும் தலையால் முட்டி போட்டமை விசேட அம்சமாகும்.

போட்டியின் 34ஆவது நிமிடத்தில் அணித் தலைவர் ச்சோ குக் பரிமாறிய பந்தை ரி ஜொங் டொக் தலையால் முட்டி முதலாவது கோலைப் போட்டு வட கொரியாவை முன்னிலையில் இட்டார்.
இடைவேளை முடிந்து ஆட்டம் தொடர்ந்து முதல் நிமிடத்தில் (46ஆவது நிமிடம்) ரி ஜொங் டொக் உதைத்த பந்தை இலங்கை கோல்காப்பாளர் அஹமத் ஷரிப் முறையாக பிடிக்கத் தவறியதைப் பயன்படுத்தி அணித் தலைவர் ச்சோ குக் 2ஆவது கோலை போட்டார்.
போட்டியின் 64ஆவது நிமிடத்தில் கிம் ஜின் சொங் பரிமாறிய பந்தை ரி ஜொங் டொக் தலையால் முட்டி தனது சொந்த கோல் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கினார்.
மேலும் 13 நிமிடங்கள் கழித்து அற்புதமாக செயற்ட்ட ரி ஜொங் டொக் தனது 3ஆவது கோலையும் தலையால் முட்டி போட்டு வட கொரியாவை 4 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தார்.
இலங்கை தனது 2ஆவது போட்டியில் தஜிகிஸ்தானை நாளை திங்கட்கிழமையும் ஓமானை புதன்கிழமையும் மலேசியாவை ஞாயிற்றுக்கிழமையும் எதிர்த்தாடவுள்ளது.
வட கொரியாவுடனான போட்டியில் இலங்கை அணியில் அஹமத் ஷெரிப் (கோல் காப்பாளர்), மொஹமத் பாதில், அய்மான் ரியாஸ் ஸவாஹிர், மொஹமத் பர்ஹாத், மொஹமத் ஷஹில், முஹம்மது முன்சிப் (தலைவர்), மொஹமத் தில்ஹாம், மொஹம் ஹம்தி, மொஹமத் சதீர், எம். இஸட். முபாஸல், ஜே. ஹரிஷ் ஆகியோர் முதல் பதினொருவராக விளையாடினர்.
மாற்றுவீரர்களாக மொஹமத் உமர் (46 நி.), மொஹமத் அத்தீப் (74 நி.) ஆகிய இருவரே களம் இறக்கப்பட்டனர்.
இலங்கை குழாத்தில் மொஹமத் அப்துல்லா, முஹமத் அல்பத்திக், ஆர். தேனுக்க, ஏ. ஆர். மலரவன், ஆர். மதுமிதன், டி. அபிஷான், மொஹம் சாஹி, மொஹமத் ஸியாத், எஸ். ஆர்ணிகன், ரி. நிலுஜன் ஆகியோரும் இடம்பெறுகின்றனர்.
20 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் தலைமைப் பயிற்நுநராக இராஜமணி தேவசகாயம் செயற்படுகிறார்.





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM