புதிய ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவிற்கு முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்ணாண்டோ தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது-
-
பொதுநன்மைக்காக ஆபத்தான முடிவுகளை எடுப்பதே உண்மையான தலைமைத்துவம் என எண்ணும் நான் எனது அரசியல்வாழ்க்கை முழுவதும் சவால்களை தழுவியுள்ளேன்.
எனது தேசம் இருள்மயமான நிலையை எதிர்கொண்டிருந்தபோது எங்களை மீட்சியை நோக்கி கொண்டு செல்வதற்கு அவசியமானது என கருதிய கடினமான முடிவை நான் எடுத்தேன்.
தோல்வியை சந்திக்கவேண்டியிருந்தாலும் எனது முடிவு குறித்து நான் கவலைப்படவில்லை.
ஜனாதிபதி தேர்தலில் ரணில்விக்கிரமசிங்க தோல்வியடைந்திருக்கலாம் ஆனால் இவங்குரோத்து நிலையிலிருந்த தேசத்தை காப்பாற்றுவதற்கு அவர் மிகவும் பெறுமதியான பங்களிப்பை வழங்கினார்.
அவருக்கு ஆதரவை வழங்குவதில் நான் ஆற்றிய பங்களிப்பு குறித்து பெருமிதம் அடைகின்றேன்.
குறிப்பிடத்தக்க வெற்றிகள் தேர்தலில் வெற்றிகளாக மாறுவதில்லை என நான் கருதுகின்றேன்ஒரு நாடாக நாங்கள் மிகவும் சவாலான தருணங்களை எதிர்கொண்ட தருணங்களில் எனக்கு அளித்த ஆதரவிற்கு நன்றி. நான் மக்களின் மனஉணர்வுகளை புரிந்துகொள்கின்றேன்இநான் பெரும்பான்மை மக்களின் தீர்மானங்களை முழுமையாக மதிக்கின்றேன்.
புதிய ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவிற்கு வாழ்த்துவதில் சிரம் தாழ்த்துகின்றேன்.
நான் எனது அரசியல் குறித்து மீளசிந்திக்கும் இவ்வேளையில் எதிர்காலத்தில் தீவிர அரசியலில் ஈடுபடுவது குறித்து மீளாய்வு செய்வது குறித்து தீர்மானமொன்றை நான் எடுக்ககூடும்-
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM