(மெரின் லால்)

சைட்டத்திற்கு எதிராக மருத்துவ பீட மாணவர்கள் தற்போது கொழும்பு ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இருந்து பேரணி ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீட மாணவர்களாலே இந்த பேரணி தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ள மாணவர்கள் சைட்டத்திற்கு எதிராக கோசங்களை எழுப்புவதோடு தீப் பந்தங்களையும் ஏந்தியுள்ளனர்.