நாட்டுக்கும் மக்களுக்கும் கடமையைச் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெறுவது அவசியமானது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9ஆவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு சனிக்கிழமை (21) நடைபெற்ற நிலையில், அளவெட்டி சீனன்கலட்டி ஞானவரோதயா வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த இரண்டு வருடங்கள் நாட்டுக்கான தலைமைத்துவத்தினை வழங்கி நாம் மூச்செடுப்பதற்கு வழிசமைத்திருந்தார். அதன் மூலமாக நாட்டுக்கும், மக்களுக்கும் அவர் தனது அரசியல் கடமையைச் சரியாகச் செய்திருக்கின்றார்.
அவருடைய கடமையைச் சரியாகச் செய்தமைக்காக அவருக்கு நான் எனது வாக்கிளை அளித்துள்ளதோடு, எதிர்கல இருப்புக்காக எமது மக்களும் அவருக்கான வாக்குகளை வழங்கியிருப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM