வவுனியா, செட்டிகுளம் மகாவித்தியாலய அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டாம் எனக் கோரி பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்களால் இன்று பாடசாலை முன்பாக போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது அவ்விடத்தில் வந்த பொலிஸார் குறித்த மாணவர்களை பாடசாலைக்குள் அனுப்ப முற்பட்டனர். ஆனால் மாணவர்கள் அதைப் பொருட்படுத்தாது தமது பெற்றோர் , பழைய மாணவர்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்நிலையில் அங்கு கடமையில் நின்ற பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், செய்தி சேகரித்த ஊடகவியலாளர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர், பழைய மாணவர்களை தனது கைத்தொலைபேசியில் காணொளி பதிவுசெய்தார். இதனால் மாணவர்கள் பலரும் அச்சமடைந்துள்ளனர்.

தற்போதை ஆட்சியில் பொலிஸார் இவ்வாறு காணொளி பதிவு செய்து அச்சுறுத்தும் சம்பவங்கள் வடக்கில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.