தயாரிப்பு : பிரின்ஸ் பிக்சர்ஸ்
நடிகர்கள் : 'அட்டக்கத்தி' தினேஷ், ஹரிஷ் கல்யாண், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சுவாசிகா விஜய், பால சரவணன், ஜென்சன் திவாகர், டி எஸ் கே மற்றும் பலர்
இயக்கம் : தமிழரசன் பச்சமுத்து
மதிப்பீடு : 3/5
துடுப்பாட்டத்தை மையப்படுத்தி இதற்கு முன் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.
அதிலும் குறிப்பாக உள்ளூர் துடுப்பாட்டத்தை மையப்படுத்தி பல படங்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ளன இந்நிலையில் மீண்டும் உள்ளூர் துடுப்பாட்டத்தை கதைக் களமாக கொண்டு வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் 'லப்பர் பந்து'. இந்த உள்ளூர் துடுப்பாட்ட பின்னணியிலான லப்பர் பந்து ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
துடுப்பாட்டத்தில் சிறந்த மட்டை வீரராகவும், ஓட்டங்களை குவிப்பதில் வல்லவராகவும் இருக்கிறார் கெத்து எனும் பூமாலை (அட்டக்கத்தி தினேஷ்).
இவர் முதல் பந்தை தவிர, ஒவ்வொரு பந்தை எதிர்கொள்ளும் போதும் ஓட்டங்களை அதிரடியாக குவிக்கிறார்.
இவர் எந்த அணியில் ஆடுகிறாரோ ...! அந்த அணிதான் வெற்றி கோப்பையை வெல்லும். ஆனால் இவர் துடுப்பாட்டம் ஆடுவது அவருடைய மனைவிக்கு சுத்தமாக பிடிக்காது.
அதே தருணத்தில் ஓட்டத்தை குவிப்பதில் வல்லவரான கெத்துவிற்கு எதிராக அன்பு (ஹரிஷ் கல்யாண்) பந்து வீசுவதில் நிபுணராக இருக்கிறார்.
இவர் பந்து வீசினால் எதிரணியினர் ஓட்டங்களை எடுப்பதில் திணறுவார்கள். தடுமாறுவார்கள். இவர் ஒரு முறை கெத்து விளையாடும் அணிக்கு எதிராக பந்து வீசும் அணியில் இடம்பெறுகிறார். ஆனால் எதிர்பாராத விதமாக களத்தில் விளையாடும் வீரராக அவர் தெரிவு செய்யப்படவில்லை.
அதுபோன்றதொரு வாய்ப்பு கிடைக்கும் போது கெத்துவின் விக்கட்டை அன்பு பறிக்கிறார். துடுப்பாட்டத்தில் தன் திறமையையும், அனுபவத்தையும் துவம்சம் செய்த அன்பு மீது கோபம் கொள்கிறார் கெத்து.
இந்த தருணத்தில் கெத்துவின் மகளை அன்பு காதலிக்கிறார். ஏற்கனவே விளையாட்டில் தன்னை தோற்கடித்ததால் அன்பு மீது பகை பாராட்டும் கெத்து தன் மகளை அன்பு காதலிக்கிறார் என்றவுடன் இன்னும் கோபம் தலைக்கேறுகிறது.
தான் காதலிப்பது கெத்துவின் மகளை தான் என தெரிந்தவுடன் அன்புக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.
இந்தத் தருணத்தில் சூழல் அவர்களுக்குள் இருக்கும் கோபத்தை ஈகோவாக மாற்றுகிறது. இந்த ஈகோ அவர்களது வாழ்க்கையை எப்படி திசை திருப்புகிறது என்பதை உணர்வுபூர்வமாகவும், எதிர்பாராத சுவராசியமான திருப்பங்களுடன் விவரிப்பது தான் 'லப்பர் பந்து' படத்தின் கதை.
இதில் கெத்து என்கிற பூமாலை கதாபாத்திரத்தில் அட்டகத்தி தினேஷ் தன்னுடைய அனுபவம் மிக்க நடிப்பால் அதகளம் செய்கிறார்.
சிறிய இடைவேளைக்குப் பிறகு திரை தோன்றலுக்கு திரும்பியிருக்கும் அட்டக்கத்தி தினேஷின் நடிப்பு திறமை பளிச்சிடுவதால் ரசிகர்கள் உற்சாகத்துடன் அவரை வரவேற்கிறார்கள்.
துடுப்பாட்டத்தில் தவிர்க்க முடியாத வீரர் என்றாலும் குடும்பம் என்று வந்து விட்டால் அதிலும் துடுப்பாட்டத்தை விரும்பாத மனைவி அமைந்து விட்டால் அதற்கு அடங்கிப் போகும் அப்பாவி கணவனாக அட்டகத்தி தினேஷ் அற்புதமாக நடித்திருக்கிறார்.
அவருடைய இந்த கதாபாத்திர சித்தரிப்பு ரசனைக்குரியதாக இருக்கிறது. இவரது மனைவியாக நடித்திருக்கும் சுவாசிகா விஜயும் நன்றாக நடித்திருக்கிறார்.
பந்து வீசுவதில் நிபுணரான அன்பு கதாபாத்திரத்தில் ஹரிஷ் கல்யாண் நேர்த்தியாக பொருந்தி, தன் தனித்துவமான நடிப்பை வழங்கி ரசிகர்களின் மனதை அள்ளுகிறார்.
இவர் இதற்கு முன் நடித்த 'பார்க்கிங்' எனும் திரைப்படத்திலும் ஈகோ தான் கதையின் மையப்புள்ளி என்றாலும் இந்த திரைப்படத்தில் வித்தியாசமான கோணத்தில் அதை வெளிப்படுத்தி தன் அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார். அதிலும் உச்சகட்ட காட்சியில் இவரின் நடிப்பும், தோல்விக்கான விளக்கமும் ரசிகர்களை ஏற்றுக் கொள்ள வைக்கிறது. இந்த இடத்தில் இயக்குநர் படைப்பு ரீதியாக சரியான உச்சத்தை தொட்டிருக்கிறார்.
'அடேங்கப்பா..' அணியின் தலைவரான காளி வெங்கட்டின் நடிப்பும், அவரது மகளின் துடுப்பாட்ட திறமையும் கவனம் இருக்கிறது.
அன்புவின் காதலியாக நடித்திருக்கும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் இயல்பாக நடித்து மனதை கவர்கிறார். இவர்களை விட பால சரவணன் பல இடங்களில் தன்னுடைய 'பஞ்ச்' லைன் உரையாடல் மூலம் ரசிகர்களின் கவனத்தை கவர்வதுடன் மட்டுமல்லாமல் சிந்திக்கவும் தூண்டுகிறார்.
அதிலும் குறிப்பாக 'சாதித் திமிரா ஆம்பள திமிரா..' எனக் கேட்பதும், 'அது என்ன தம்பி மாதிரி...' என்ற உரையாடலும், 'எனக்கும் எஸ்.சி.ல பிரெண்ட்ஸ்ங்க இருக்காங்கன்னு சொல்றது கேவலம் தெரியுமா..' என்ற வசனங்கள் உரையாடல் ஆசிரியரை பாராட்ட தோன்றுகிறது.
உரையாடல்கள் மூலம் மட்டுமல்லாமல் குறியீடுகள் மூலமாகவும், பாடல்கள் மூலமாகவும் காட்சிகள் அனைத்தையும் கலகலப்பாக்கி, ரசிகர்களை சோர்வடைய செய்யாமல் உற்சாகத்துடன் பட மாளிகை அனுபவத்தை வழங்கி இருப்பதற்கு இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவிற்கு மீண்டும் ஒரு பூங்கொத்தை அளித்து தாராளமாக பாராட்டை தெரிவிக்கலாம்.
தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவும்.. குறிப்பாக உள்ளூர் துடுப்பாட்டம் தொடர்பான மைதான காட்சிகளும் தனி கவனத்தை ஈர்க்கின்றன. ஷான் ரோல்டனின் பாடல்களும், பின்னணி இசையும் பார்வையாளர்களுக்கு மனநிறைவை அளிக்கிறது.
மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையேயான ஈகோ உள்ளூர் துடுப்பாட்டம் வலிமையான பெண் கதாபாத்திரங்கள் துடுப்பாட்ட வர்ணனையிலும் நகைச்சுவை சமூக பொறுப்புணர்வு சாதி ஒழிப்பு எனும் சமூகத்திற்கு தேவையான விடயத்திற்கு சாதி மறுப்பு திருமணம் எனும் சமூக பந்த உறவை காட்டிலும் திறமை சார்ந்த விளையாட்டுகளும் சிறந்த காரணியாக திகழும் என ஆக்கபூர்வமான சிந்தனைக்காக படைப்பாளி தமிழரசன் பச்சமுத்துவை கைவலிக்க கைகுலுக்கி பாராட்டு தெரிவிக்கலாம்.
லப்பர் பந்து - வெற்றிக்கான ஹெலிகாப்டர் ஷாட்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM