சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Published By: Digital Desk 2

21 Sep, 2024 | 07:14 PM
image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி இருக்கும் 'வேட்டையன்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த முன்னோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

இயக்குநர் த. செ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'வேட்டையன்' எனும் திரைப்படத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பொலிவுட் சுப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், ராணா டகுபதி, பகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், அபிராமி, ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

எஸ். ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னையில் நடைபெற்ற பிரத்யேக விழாவில் வெளியிடப்பட்டது.

 இந்த முன்னோட்டத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் காவல்துறையில் பணியாற்றும் உயரதிகாரியாகவும், குற்றவாளிகளை சரமாரியாக சுட்டுக் கொல்லும் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாகவும் தோன்றுகிறார் என்பதும், காட்சிகள் விறுவிறுப்பாக இருப்பதை உறுதிப்படுத்தி இருப்பதாலும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் திரையிடப்பட்டது...

2025-11-08 20:24:43
news-image

இயக்குநர் ராஜமவுலி இயக்கும் புதிய திரைப்படத்தின்...

2025-11-08 18:20:39
news-image

குளோபல் ஸ்டார்' ராம் சரண் நடிக்கும்...

2025-11-08 18:18:09
news-image

நடிகர் உதய் தீப் நடிக்கும் 'சாவு...

2025-11-08 18:16:39
news-image

நடிகர் உதய் தீப் நடிக்கும் 'சாவு...

2025-11-08 18:15:52
news-image

இயக்குநர் சீனு ராமசாமி - நடிகர்...

2025-11-08 18:06:32
news-image

சிறு தெய்வ வழிபாட்டின் பின்னணியை விவரிக்கும்...

2025-11-08 17:43:36
news-image

மீண்டும் வெளியாகும் சேரனின் 'ஆட்டோகிராப் '

2025-11-08 17:34:16
news-image

அருண் விஜய் நடிக்கும் ' ரெட்ட...

2025-11-08 17:26:28
news-image

அதர்ஸ் - திரைப்பட விமர்சனம்

2025-11-07 17:43:23
news-image

புதுமுக நடிகர் மதி நடிக்கும் 'கும்கி...

2025-11-07 17:13:13
news-image

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பராசக்தி' படத்தில் முதல்...

2025-11-07 16:59:16