நிச்சயமாக நாம் ஆதரிக்கின்ற வேட்பாளர் வெற்றி பெறுவார் - சாணக்கியன் 

21 Sep, 2024 | 04:29 PM
image

நிச்சயமாக நாம் ஆதரிக்கின்ற வேட்பாளர் வெற்றி பெறுவார் என்கின்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. இதனை தமிழ் மக்கள் மிகவும் ஒரு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பு பட்டிருப்பு (களுவாஞ்சிக்குடி) மகா வித்தியாலயத்தில் தனது வாக்கைப் பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.  

அவர் மேலும் தெரிவிக்கையில், 

தமிழ் மக்களுக்கு உரிய நிலையான அரசியல் தீர்வினையும் சாதகமாகவும் காணப்படுகின்ற ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களையே தமிழரசு கட்சி ஆதரிக்கின்றது.

சஜித் பிரேமதாச அவர்களின் பேச்சுக்கு முதல் பேச்சாக என்னுடைய பேச்சு கடந்த பிரச்சார மேடையில் அமைந்திருந்தது. இதன் மூலம் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்... கடந்த கால அரசியல் வரலாற்றை எடுத்து நோக்கினோம். ஆனால், ஜனாதிபதி தேர்தல் குறிப்பாக இனவாதத்தை அடிப்படையாக வைத்து ஜனாதிபதியின் தீர்மானிக்கின்ற ஒரு நிலைமை காணப்பட்டது. இருப்பினும் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி தேர்தல் மேடையில், இறுதி தேர்தல் மேடையில் தமிழரசு கட்சியின் சார்பாக நான் அங்கு உரையாற்றி இருந்தேன்.

இதன் மூலம் தெற்கிலும் வடக்கிலும் கிழக்கிலும் ஒட்டுமொத்த இலங்கையிலும் திசை திரும்பிப் பார்க்கின்ற ஜனாதிபதி தேர்தலாக இது அமையப் பெற்றுள்ளது.

நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற ஜனாதிபதி தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடைபெறுவதற்கு பொது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றேன் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வத்தளையில் 9,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றல்

2026-02-18 17:16:06
news-image

குடும்ப தகராறு ; பிரிந்து வாழும்...

2026-02-18 16:56:26
news-image

மொட்டு கட்சியுடன் "மக்கள் குரல்" சந்திப்பு!

2026-02-18 16:50:14
news-image

மாத்தளையில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்:...

2026-02-18 16:29:50
news-image

அக்குரேகொட இரட்டைக்கொலை: சகோதரர்கள் விளக்கமறியலில்!

2026-02-18 16:08:54
news-image

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பாணை!

2026-02-18 15:28:45
news-image

வவுனியாவில் 120 இயலாமையுடன் கூடிய பெண்களுக்கு...

2026-02-18 15:20:37
news-image

சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணை 

2026-02-18 15:05:54
news-image

இலங்கை மத்திய வங்கிக்கு கிறிஸ்டலினா ஜோர்ஜீவா...

2026-02-18 14:49:00
news-image

மட்டக்களப்பில் வெள்ள அபாயம்

2026-02-18 14:41:45
news-image

நாட்டின் பல பாகங்களில் 100 மி.மீ...

2026-02-18 14:27:05
news-image

இலஞ்சம் பெற்ற காதி நீதிபதி கைது!

2026-02-18 14:09:14