சகல அரசியல் கட்சிகளும் மக்களின் தெரிவுக்கு மதிப்பளித்து செயலாற்றவேண்டும்; தேர்தலின் பின்னரான வன்முறைகளுக்கு இடமளிக்கக்கூடாது - சமூக நீதிக்கான தேசிய இயக்கம்

Published By: Vishnu

21 Sep, 2024 | 01:57 AM
image

(நா.தனுஜா)

இலங்கையில் அமைதியானதும், வன்முறைகள் அற்றதுமான தேர்தல்களை நடாத்துவதற்குரிய முயற்சிகள் தொடரவேண்டும். அதற்கு மாறான செயற்பாடுகள் இலங்கையும் பங்களாதேஷை போன்ற நிலையை அடைவதற்கு வழிவகுக்கும் எனச் சுட்டிக்காட்டியிருக்கும் சமூக நீதிக்கான தேசிய இயக்கம், மக்களின் தெரிவுக்கு சகல அரசியல் கட்சிகளும் மதிப்பளித்து செயற்படவேண்டும் என வலியுறுத்தியிருக்கிறது.

இதுகுறித்து முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 

இலங்கையின் மிகக்காத்திரமான ஜனாதிபதித்தேர்தல் சனிக்கிழமை (21) நடைபெறவிருக்கும் நிலையில், அடுத்த ஐந்து வருடகாலத்துக்கு தமது தலைவரைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பு மக்களுக்குக் கிடைத்திருக்கிறது. இத்தேர்தலில் எவ்வித இடையூறுகளுமின்றி சுதந்திரமாக வாக்களிப்பதற்கான உரிமை மக்களுக்கு உண்டு. 

இத்தகு பின்னணியில் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு இருக்கும் பொறுப்பை விட கட்சித்தலைவர்களுக்கு இன்னமும் வலுவான பொறுப்பு இருக்கிறது. மக்களின் தெரிவுக்கு மதிப்பளிப்பதே அவர்களது அதிமுக்கிய கடமையாகும். அது நாட்டின் சட்டங்கள் மற்றும் சமூக நீதிக்கோட்பாடுகளுக்கு மதிப்பளிப்பதாக மாத்திரமன்றி, அடிப்படை குடியியல் தராதரங்களுக்கு மதிப்பளிப்பதாகவும் அமையும். 

இலங்கையில் அமைதியானதும், வன்முறைகள் அற்றதுமான தேர்தல்களை நடாத்துவதற்குரிய முயற்சிகள் தொடரவேண்டும். அதற்கு மாறான செயற்பாடுகள் இலங்கையும் பங்களாதேஷை போன்ற நிலையை அடைவதற்கு வழிவகுக்கும். சில ஆபிரிக்க நாடுகளில் தேர்தலுக்குப் பின்னர் ஏற்பட்ட வன்முறைகள் எத்தகைய மிகமோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தின என்பதைப் புரிந்துணர்வதும், எமது நாட்டில் அத்தகைய நிலை ஏற்படாமல் தடுப்பதும் இன்றியமையாததாகும். 

இவ்வாறானதொரு பின்னணியில் சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல் நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு, பாதுகாப்புப்பிரிவினர் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட சகல தரப்பினராலும் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகள் பாராட்டத்தக்கவையாகும். 22 ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கையின் எதிர்காலம் முறையாக செயற்பாடும் அதிகாரிகளிலும், சட்டத்தை மதித்து செயலாற்றும் பிரஜைகளிலுமே தங்கியிருக்கிறது என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இழப்பீட்டுக்கான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளமை மகிழ்ச்சிக்குரியது...

2025-02-12 18:15:45
news-image

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமா?...

2025-02-12 18:23:26
news-image

யாழ்ப்பாணத்தில் பழைய அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட்டுள்ளது...

2025-02-12 18:13:39
news-image

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம்...

2025-02-12 21:15:49
news-image

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் தையிட்டி சட்டவிரோத...

2025-02-12 21:11:13
news-image

இழப்பீட்டுத் தொகை குறித்து பேசும் ஆளும்...

2025-02-12 18:05:05
news-image

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தற்காலிகமாக...

2025-02-12 18:23:50
news-image

உலக காலநிலை பிரச்சினைகளை முகங்கொடுக்க உலகளாவிய...

2025-02-12 19:49:02
news-image

தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு...

2025-02-12 18:22:25
news-image

எமது ஆட்சியில் மின்துண்டிப்புக்கு மின்சார சபையின்...

2025-02-12 18:24:55
news-image

பாடசாலை பிரதி அதிபரின் விடுதியில் திருட்டு...

2025-02-12 18:18:16
news-image

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 139 பேருக்கு...

2025-02-12 18:24:06