தெஹிவளை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்

20 Sep, 2024 | 05:40 PM
image

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெஹிவளை பிரதேசத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை (20) காலை 6.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

இதனையடுத்து, காயமடைந்தவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெஹிவளை மாநகர சபையில் கடமையாற்றும் 45 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் நெருங்கிய உறவினர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்த பிரதேசத்தில் உள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை கைது செய்வது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டவவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் வண்டியை...

2025-03-20 14:04:55
news-image

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதி...

2025-03-20 13:49:47
news-image

சிறிய சிவனொளிபாதமலையிலிருந்து கீழே தவறி விழுந்து...

2025-03-20 13:27:55
news-image

காசாவுக்கான மின்சார விநியோகத்தை துண்டித்தது இஸ்ரேல்...

2025-03-20 13:55:42
news-image

“ரன் மல்லி”யின் நண்பன் ஹெரோயினுடன் கைது

2025-03-20 13:11:36
news-image

உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தல் ;...

2025-03-20 13:19:18
news-image

ஏப்ரல் மாதம் முதல் பால் தேநீரின்...

2025-03-20 12:40:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-20 12:23:33
news-image

தேசபந்து தென்னக்கோனின் வீடு ஒரு வடிசாரய...

2025-03-20 12:06:24
news-image

கணேமுல்ல பகுதியில் சட்டவிராத மதுபானத்துடன் ஒருவர்...

2025-03-20 12:03:15
news-image

வாய்ப் புற்றுநோயை ஏற்படுத்தும் புகையிலை பாவனை

2025-03-20 12:10:51
news-image

யாழில் காணாமல்போன மீனவர்கள் இராமநாமபுரம் கடலில்...

2025-03-20 11:35:39