'சுப்ரீம் ஸ்டார்' சரத்குமார் - நடிகர் சண்முக பாண்டியன் ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.
இயக்குநர் பொன். ராம் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்த்தின் இளைய வாரிசும், நடிகருமான சண்முக பாண்டியன் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தில் 'சுப்ரீம் ஸ்டார்' சரத்குமார் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இவர்களுடன் நடிகை தாமிகா, நடிகர் யோகி ராம், கஜராஜ், கல்கி ராஜன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கிராமத்து பின்னணியிலான பொழுதுபோக்கு படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்டார் சினிமாஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் முகேஷ் டி. செல்லையா தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் உள்ள தேனி நகரத்தில் தொடங்கி இருக்கிறது.
இதனிடையே 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா ', 'எம்ஜிஆர் மகன்' ஆகிய வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் நடிகர் சண்முக பாண்டியன் மற்றும் சரத்குமார் இணைந்து நடிப்பதால் இந்த திரைப்படத்திற்கு படப்பிடிப்பு நடைபெறும் தருணத்திலேயே ரசிகர்களிடம் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM