தங்காலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வயோதிபர் ஒருவர் வைத்தியசாலையில் செலுத்தப்பட்ட ஊசி மூலம் செலுத்தப்பட்ட மருந்து ஒவ்வாமை காரணமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தங்காலை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி அவந்தி ரூப்பசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு தலையில் பலத்த காயங்களுடன் தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 63 வயதுடைய வயோதிபர் ஒருவர் வைத்தியசாலையில் ஊசி மூலம் செலுத்தப்பட்ட மருந்து ஒவ்வாமை காரணமாகக் கடந்த 17 ஆம் திகதி உயிரிழந்திருந்தார்.
உயிரிழந்தவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் மேலதிக பரிசோதனைக்காக இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஊசி மூலம் செலுத்தப்பட்ட மருந்து காரணமாக குறித்த வைத்தியசாலையில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் இந்த ஊசி மூலம் செலுத்தப்பட்ட மருந்து தொடர்பில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தலைவர் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
இந்த ஊசி மூலம் செலுத்தப்பட்ட மருந்துகளை வைத்தியசாலைகளில் பயன்படுத்துவதற்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை நேற்று (19) தடை விதித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM