முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 137 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை அனுப்பிவைக்கப்படும் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும், இத்தேர்தல் வாக்களிப்பு நிலையங்களை கண்காணிக்கும் பணிகளுக்காக இயங்கும் 138 வலயங்களுக்கு பொறுப்பாக உள்ள உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் ஆணையாளரும் மாவட்ட செயலாளருமான அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு அவர், முல்லைத்தீவின் சில இடங்களில் காட்டுயானைகளின் தொல்லைகள் இருப்பதனால் அவற்றை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அப்பணிகளை கிராம அலுவலகர்கள், அந்தந்த பிரதேசங்களுக்கு பொறுப்பான பிரதேச செயலாளர்கள் மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் இருந்து வாக்குப் பெட்டிகள் இன்று (20) காலை அனுப்பிவைக்கப்பட்டதை தொடர்ந்து, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் ஆணையாளரும் மாவட்ட செயலாளருமான அ.உமாமகேஸ்வரன் ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
நாளைய தினம் (21) இடம்பெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக வன்னி தேர்தல் தொகுதியின் முல்லைத்தீவு மாவட்டத்தில் தேர்தலுக்கான மிக முக்கிய ஏற்பாடான வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குசீட்டுக்களை அனுப்பும் பணிகள் நிறைவடைந்திருக்கிறது.
இன்று (20) காலை முல்லைத்தீவு மகா வித்தியாலயத்திலிருந்து 137 வாக்களிப்பு நிலையங்களுக்கு அதற்கு பொறுப்பாக இருக்கும் சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களின் தலைமையிலேயே வாக்குப்பெட்டிகளும் வாக்குச்சீட்டுக்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்தல் வாக்களிப்பு நிலையங்களை கண்காணிக்கும் பணியில் 138 வலயங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த 138 வலயங்களுக்கு பொறுப்பாக இருக்கின்ற உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.
மிக முக்கியமாக, எமது முல்லைத்தீவு மாவட்டத்தில் சில இடங்களில் காட்டுயானைகளின் தொல்லைகள் இருப்பதனால் அவற்றை எதிர்கொள்ளக்கூடிய விடயங்களையும் நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம்.
இப்பணிகளில் குறிப்பாக கிராம அலுவலர்கள், ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் பொறுப்பாக உள்ள பிரதேச செயலாளர்கள் இந்த விடயங்களை கவனிக்கவுள்ளனர் என தெரிவித்தார்.
இத்தேர்தலில் 1506 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் 500 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM