தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடக்கும்புர தோட்டத்தில் மரத்திலிருந்து கீழே விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
அதே தோட்டத்தைச் சேர்ந்த ந.கனகேஸ்வரன் (வயது 31) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் ஒரு பிள்ளையின் தந்தையாவார்.
உயிரிழந்த நபர் மற்றொரு நபருடன் 100 அடி உயரமுள்ள மரத்தில் ஏறி, மரத்தின் கிளைகளை விறகுக்காக வெட்டிக் கொண்டிருந்தார்.
இதன்போது, அவர் குளவி கொட்டுக்கு இலக்காகி மரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
அவர் குளவிகள் கொட்டியதால் பயத்தினால் மரத்தில் இருந்து கீழே விழுந்திருக்கலாம் என சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் தலவாக்கலை பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குளவி கொட்டுக்கு இலக்கான மற்றைய நபர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. தலவாக்கலை பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM