(நெவில் அன்தனி)
ஐக்கிய அரபு இராச்சியத்தில் அக்டோபர் 3ஆம் திகதியிலிருந்து 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியை முன்னிட்டு 15 வீராங்கனைகளைக் கொண்ட இலங்கை குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று வெள்ளிக்கிழமை (20) வெளியிட்டது.
மிகவும் மூத்த, அனுபவசாலியான சமரி அத்தபத்து தொடர்ந்து அணியின் தலைவியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
139 மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள துடுப்பாட்ட சகலதுறை வீராங்கனையான 34 வயதுடைய சமரி அத்தபத்து 3 சதங்கள், 12 அரைச் சதங்கள் உட்பட மொத்தமாக 3326 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அத்துடன் 56 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார்.
19 வயதுக்குட்பட்ட இலங்கை யுவதிகள் அணியில் பந்துவீச்சில் பிரகாசித்த 15 வயதுடைய ஷஷினி கிம்ஹானி விஜயரத்னவும் இலங்கை குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளார்.
கடந்த மாதத்திற்கான ஐசிசி விருதை வென்றெடுத்த ஹர்ஷித்தா சமரவிக்ரம மற்றொரு சிரேஷ்ட வீராங்கனையாக குழாத்தில் இடம்பெறுகிறார்.
சர்வதேச ரி20 போட்டிகளில் அண்மையில் வெகுவாக பிரகாசித்த பல வீராங்கனைகள் குழாத்தில் இடம்பெறுகின்றனர்.
இலங்கை மகளிர் ரி20 குழாம்
சமரி அத்தபத்து (தலைவி), ஹர்ஷித்தா சமரவிக்ரம, விஷ்மி குணரட்ன, கவிஷா டில்ஹாரி, கவிஷா டில்ஹாரி, நிலக்ஷி டி சில்வா, ஹாசினி பெரேரா, அனுஷ்கா சஞ்சீவனி, சச்சினி நிசன்சலா, இனோஷி பெர்னாண்டோ, அச்சினி குலசூரய, இனோக்கா ரணவீர, ஷஷினி கிம்ஹானி, அமா காஞ்சனா, சுகந்திகா குமாரி.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM