இரண்டு மணிநேரமாக 20 கிலோ மலைப்பாம்பின் பிடியில் சிக்கியிருந்த தாய்லாந்து பெண் - போராடி மீட்ட பொலிஸார்

20 Sep, 2024 | 11:48 AM
image

இரண்டு மணிநேரத்திற்கு மேல் 20 கிலோ மலைப்பாம்பின் பிடியில் சிக்குண்டிருந்த தாய்லாந்தை சேர்ந்த பெண்ணை மீட்பு பணியாளர்கள் மீட்டுள்ளனர்.

தாய்லாந்தின் தலைநகரிலிருந்து இரண்டுகிலோமீற்றர் தொலைவில் உள்ள சமுட் பிரகான் என்ற மாநிலத்தில் தனது வீட்டில் மலைப்பாம்பின் பிடியில் சிக்குண்டதாக அரோம் அருண்ரோஜ் என்ற 64 வயது பெண் தெரிவித்துள்ளார்.

ஆடைகளை தோய்த்துக்கொண்டிருந்தபோது ஏதோ எனது காலில் தீண்டியது போல உணர்;ந்தேன் திரும்பிப்பார்த்தபோது அது பாம்பு என அவர் தெரிவித்துள்ளார்.

நான் அதனை எதிர்த்து போரட முயன்றேன்,உதவிக்காக கூக்குரலிட்டேன் ஆனால் எவரும் செவிமடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஒருகட்டத்தில் அது விட்டுவிடும் என நினைத்து அதன் தலையை பிடித்தேன் ஆனால் அது என்னை மேலும் இறுக்கியது என அவர் தெரிவித்துள்ளார்.

அயலில் உள்ள ஒருவர் இறுதியாக எனது அலறலை செவிமடுத்து உதவியை கோரினார் என தாய்லாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உள்ளேயிருந்த மெல்லிய அலறல் கேட்டதை தொடர்ந்து அரோமின் கதவை உடைத்தோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்,நீண்டநேரமாக அவரை மலைப்பாம்பு அவரது கழுத்தை நெரித்து வைத்திருக்கவேண்டும் ஏனென்றால் அவரின் உடலின் நிறம் மாறியிருந்தது என பொலிஸார்  குறிப்பிட்டுள்ளனர்.

அது பெரிய மலைப்பாம்பு,அவரது காலில் பாம்பு கடித்த அடையாளத்தை பார்த்தேன் வேறு பகுதிகளிலும் கடித்திருக்கலாம் என  பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

நான்கு அடி நீளமான 20 கிலோ எடையுடைய மலைப்பாம்பின் படங்கள் வெளியாகியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருக்கு 1...

2024-10-03 15:35:20
news-image

லெபனானில் இலங்கையர் எவரும் இதுவரை மோசமான...

2024-10-03 15:01:24
news-image

வியட்நாம் மிருகக்காட்சி சாலையில் பறவை காய்ச்சல்...

2024-10-03 14:22:09
news-image

ஜப்பான் விமான நிலையத்தில் புதைக்கப்பட்ட குண்டு...

2024-10-03 09:39:09
news-image

பெய்ரூட்டின் மத்திய பகுதியில் உள்ள மருத்துவநிலையம்...

2024-10-03 06:01:40
news-image

லெபனான் மோதலில் எட்டு இஸ்ரேலிய படையினர்...

2024-10-02 20:33:33
news-image

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் இஸ்ரேலிற்குள்...

2024-10-02 17:11:01
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொண்டால் அதன்...

2024-10-02 10:41:05
news-image

இஸ்ரேலின் புலனாய்வு பிரிவின் தலைமையகம் -...

2024-10-02 08:09:28
news-image

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் -...

2024-10-02 06:40:53
news-image

இஸ்ரேலிய தலைநகரில் துப்பாக்கி தாக்குதல் -...

2024-10-02 06:17:03
news-image

இஸ்ரேல் மீது ஈரான் தொடர் ஏவுகணை...

2024-10-02 05:54:56