மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி முதலாவது இன்னிங்ஸில் 286 ஓட்டங்களை பெற, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 407 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் பாகிஸ்தான் அணி சார்பில் மிஸ்பா ஹுல் ஹக் ஆட்டமிழக்காமல் 99  ஓட்டங்களை பெற, சகல விக்கட்டுகளும் இழக்கப்பட்ட நிலையில், அவர் தனது சதத்தை பெறமுடியாமல் போனது.

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணி 152 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழக்க, பாகிஸ்தான் அணிக்கு வெற்றியிலக்கு 32 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

பாகிஸ்தான் அணி சார்பில் யசிர் ஷா 6 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

குறித்த இலக்கினை பாகிஸ்தான் அணி 10.5 ஓவர்களில் பெற்றதுடன், டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக யசிர் ஷா தெரிவுசெய்யப்பட்டார்.