ஜனாதிபதித்தேர்தல் காலத்தில் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றவா? - விசேட கண்காணிப்புக்குழுவைப் பணியில் ஈடுபடுத்தியது மனித உரிமைகள் ஆணைக்குழு

Published By: Vishnu

20 Sep, 2024 | 12:30 AM
image

(நா.தனுஜா)

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் சனிக்கிழமை (21) நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் முறைகேடுகள் இடம்பெறுவதைத் தடுக்கும் நோக்கில் நாடளாவிய ரீதியில் நிறுவப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் விசேட கண்காணிப்புப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 

அதுமாத்திரமன்றி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் உள்நாட்டு மற்றும் சர்வதேச தேர்தல் கண்காணிப்புக்குழுக்கள் கடந்த ஒரு மாதகாலமாக தேர்தல் வன்முறைகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் வலுவான கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றன.

 இவ்வாறானதொரு பின்னணியில் தேர்தல் தினமான நாளையும் (21), வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நாளை மறுதினமும் (22) தமது குழுவினரை விசேட மனித உரிமைகள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தியிருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இவ்விரு நாட்களும் நாடளாவிய ரீதியில் எந்தவொரு இடத்திலேனும் அடிப்படை உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெறுவதாக அறியக்கிடைத்தால், மேற்குறிப்பிட்ட பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள குழு அவ்விடத்துக்கு விஜயம் செய்து, நிலைமைகளை ஆராய்ந்து உரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கும். 

எனவே ஜனாதிபதித்தேர்தல் இடம்பெறும் காலப்பகுதியில் அதனுடன் தொடர்புடைய வகையில் எங்கேனும் அடிப்படை உரிமைகள் மீறப்படும் பட்சத்தில், அதுகுறித்து 076 7914695 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொண்டு மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள குழுவுக்கு அறிவிக்கமுடியும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகரிக்கும் சைபர் குற்றங்களை தடுக்க சட்டங்களில்...

2026-05-21 16:09:37
news-image

தமிழ் அரசியல்கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கு...

2026-05-21 16:15:45
news-image

மலையக மக்கள் இன்னும் நவீன கொத்தடிமைகளே...

2026-05-21 19:02:12
news-image

சர்வதேச வல்லரசுகள் மௌனம் காக்கும் என்று...

2026-05-21 16:18:33
news-image

பதில் ஆசிரிய ஆலோசகர்கள் விரைவில் நிரந்தரமாக்கப்படுவர்...

2026-05-21 16:25:40
news-image

கல்வி மறுசீரமைப்பு முற்றாக முடக்கம்; அமைச்சு...

2026-05-21 16:29:11
news-image

வடக்கு கல்வி அதிகாரிகளின் சட்டவிரோத செயல்கள்...

2026-05-21 19:01:23
news-image

அந்தந்த காலச் சூழல்களில் அந்தந்த மக்களிடம்...

2026-05-21 18:59:26
news-image

கோட்டாபயவின் பாதையில்தான் அநுரவும் பயணிக்கிறார்; டொலர்...

2026-05-21 16:33:18
news-image

எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய அர்ச்சுனாவுக்கு...

2026-05-21 16:30:55
news-image

சமூக ஊடக சர்ச்சை: வதந்திகளுக்கு சர்வஜன...

2026-05-21 17:05:56
news-image

டொலரின் பெறுமதி, இறக்குமதி பொருட்களின் விலை...

2026-05-21 16:59:29