இன்றைய சூழலில் எம்முடைய குடும்பங்களில் உள்ள பெண் பிள்ளைகளின் சமூக பாதுகாப்பு என்பது மிகவும் அவசியமானதாகவும், அதற்கு நாளாந்தம் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய விடயமாகவும் மாற்றம் பெற்று இருக்கிறது. ஏனெனில் எம்முடைய பிள்ளைகள் இன்றைய திகதியில் பாடசாலைக்கு பயணித்து, கல்வி கற்று, தங்களது சொந்த காலில் நின்று, சுய மரியாதையுடனும், சுய கௌரவத்துடனும் இந்த மண்ணில் வாழ வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள்.
இதையே தங்களுக்கான வாழ்க்கைக்கான பற்றுகோடாகவும் கருதுகிறார்கள். இதனால் அவர்களுக்கு அதிகரித்துவிட்ட சமூக குற்ற உணர்வுகளுக்கு இடையே பாதுகாப்புடன் பயணித்து வருவதற்காக பெற்றோர்கள் ஏராளமான விடயங்களில் தங்களது சிறப்பு கவனத்தை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் எம்முடைய ஆன்மீக முன்னோர்களும் பெண் பிள்ளைகளை பாதுகாப்பதற்கான எளிய வழிமுறைகளையும், பரிகாரங்களையும் முன்மொழிந்திருக்கிறார்கள்.
உங்களது இல்லத்து பெண் பிள்ளைகள் பாடசாலைக்கும், உயர்கல்வி கற்பதற்காக கல்லூரிக்கோ அல்லது வாழ்வாதாரத்திற்காக பணியிடங்களுக்கு பயணிக்கும் போது அவர்களுக்கு ஏதேனும் அச்ச உணர்வு ஏற்பட்டாலோ அல்லது பாதுகாப்பு இல்லாத உணர்வு ஏற்பட்டாலோ கீழ்காணும் மந்திரத்தை ஒரு முறை உச்சரித்தால்.. உங்களுக்கான மன பயம் அகன்று, தெளிவும்... சூழலை எதிர்கொள்ளும் சூட்சம ஆற்றலும் கிடைக்கும் என்கிறார்கள்.
அந்த வலிமை மிக்க மந்திரம் இதுதான்...
''தம்தம் தம்தம் தும்தம் தும்தம் கருப்பண்ண சுவாமி நேச வித்மஹே!
பக்த ஹஸ்தாய தீமஹி!
தந்நோ க்ரூம் கிருஷ்ண ப்ரஜோயாத் டமார் டமார்..!
இதனை தொடர்ந்து உச்சரித்தாலும் அல்லது மனனம் செய்து கொண்டு எப்போது உச்சரித்தாலும் உடனடியாக பலன் கிடைக்கும்.
மேலும் பெண் பிள்ளைகளுக்கு எந்தவித அச்சுறுத்தலும் அல்லது மறைமுகமான தாக்குதலும் நிகழாமல் தடுக்க வேண்டும் என்றால்... அவர்கள் தங்களது இடது பாதத்தின் உள்ளங் காலில் மண் படாத பகுதியில் வட்ட வடிவில் மையை தீட்டிக்கொண்டு செல்ல வேண்டும். இப்படி செய்து கொண்டு வெளியிடங்களுக்குச் சென்று வரும்போது மறைமுகமான தாக்குதலை தவிர்க்க இயலும்.
மேலும் எம்முடைய பெண் பிள்ளைகள் தங்களது தோற்ற பொலிவிற்கு எப்போதும் முன்னுரிமை வழங்குவார்கள். இதனை பெற்றோர்கள் மறுத்தாலும்... பிள்ளைகள் கேட்பதில்லை. அவர்கள் தோற்ற பொலிவுடன் வெளியிடங்களுக்கு பயணிப்பார்கள். இதனால் அவர்களின் மீது சக பெண் பிள்ளைகளின் பொறாமை... கண்ணேறுவாக மாற்றம் பெறும். அதுவே அந்த பெண்ணின் முன்னேற்றத்திற்கு தடையாகவும், ஆரோக்கியத்திற்கு கேடாகவும் மாறக்கூடும்.
இதுபோன்ற தருணங்களில்.. ஒரு தேங்காயை வாங்கி அதன் குடுமியிலிருந்து நடுப்பகுதி வரை மஞ்சளை தடவி, அதனை உங்களது பூஜை அறையில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். இந்த தேங்காயை தேய்பிறையில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 8 மணிக்கு மேல்.. 108 முறை உங்களது பெண் பிள்ளையை சுற்றி.. அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று அந்தத் தேங்காயை சிதறு காயாக உடைக்க வேண்டும். இப்படி செய்யும் போது உங்களுடைய பெண் பிள்ளைகள் மீது ஆக்கிரமித்து இருக்கும் மறைமுகமான எதிர்மறை ஆற்றல் அழிந்துவிடும். உங்களது பெண் பிள்ளைகளின் மகிழ்ச்சி.. மீண்டும் புத்தாக்கம் செய்யப்படும்.
மேலும் எம்முடைய பெண் பிள்ளைகள் தங்களுக்கு எந்த தருணத்திலும் அச்ச உணர்வு அல்லது பாதுகாப்பின்மை உணர்வு ஏற்படுவதை தடுக்க வேண்டும் என விரும்பினால்.. பெண்கள் மற்றும் பெண்மணிகள் தங்களின் கால் மற்றும் கைகளில் மருதாணியை வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக அடி பாதத்தில் வட்ட வடிவில் மருதாணியை வைக்க வேண்டும். இப்படி செய்து கொள்ளும்போது மகாலட்சுமியின் பரிபூரண ஆசி உங்களுக்கு கிடைக்கப்பெற்று.. உங்களை தாக்க வரும் எதிர்மறை ஆற்றல் தாக்காமல் தகர்த்து எறியப்படும்.
தொகுப்பு : சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM