(நெவில் அன்தனி)
இலங்கைக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை (20) டொம் லெதம், முன்னாள் அணித் தலைவர் கேன் வில்லியம்சன் ஆகிய இருவரும் குவித்த அரைச் சதங்களின் உதவியுடன் நியூஸிலாந்து பலமான நிலையை நோக்கி நகர்ந்தவண்ணம் உள்ளது.
இலங்கை முதல் இன்னிங்ஸில் பெற்ற 305 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடும் நியூஸிலாந்து, 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 255 ஓட்டங்களைப் பெற்று உறுதியான நிலையில் இருந்தது.
நியூஸிலாந்து துடுப்பாட்டத்தில் ஒருவரைத் தவிர மற்றையவர்கள் தங்களாலான அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கினர்.
டொம் லெதம், டெவன் கொன்வே ஆகிய இருவரும் 63 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
கொன்வே 16 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் டொம் லெதம், கேன் வில்லியம்சன் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறந்த நிலையில் இட்டனர்.
திறமையாகத் துடுப்பெடுத்தாடிய டொம் லெதம் 70 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
அதன் பின்னர் 3ஆவது விக்கெட்டில் ரச்சின் ரவிந்த்ராவுடன் மேலும் 51 ஓட்டங்களை வில்லியம்சன் பகிர்ந்தார்.
வில்லியம்சன் 55 ஓட்டங்களையும் ரவிந்த்ரா 39 ஓட்டங்களையும் பெற்றனர்.
அவர்களைத் தொடர்ந்து திறமையாகத் துடுப்பெடுத்தாடிய டெரில் மிச்செல் 41 ஓட்டங்களுடனும் டொம் ப்ளண்டெல் 18 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளனர்.
பந்துவீச்சில் தனஞ்சய டி சில்வா 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இரண்டாம் நாளான நேற்றுக் காலை தனது முதல் இன்னிங்ஸை 7 விக்கெட் இழப்புக்கு 302 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை, கடைசி 3 விக்கெட்களை 3 மேலதிக ஓட்டங்களுக்கு இழந்தது.
14 ஓட்டங்களுடன் தனது துடுப்பாட்டத்தை தொடர்ந்த ரமேஷ் மெண்டிஸ் அதே எண்ணிக்கையில் ஆட்டம் இழந்தார்.
பந்துவீச்சில் வில்லியம் ஓ'ரூக் 55 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் க்ளென் பிலிப்ஸ் 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அஜாஸ் பட்டேல் 60 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
தனது 3ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வில்லியம் ஓ'ரூக் தனது 2ஆவது விக்கெட் குவியலை இன்று பதிவு செய்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM