இலங்கையின் வௌிநாட்டு தனியார் கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பிற்கு கொள்கை ரீதியில் இணக்கம் 

Published By: Vishnu

19 Sep, 2024 | 07:13 PM
image

2023 ஆம் ஆண்டு இறுதியில் காணப்பட்ட இலங்கையின் 17.5 டொலர் பில்லியன் தனியார் வணிகக் கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான இணக்கப்பாடு வியாழக்கிழமை (19) எட்டப்பட்டது. 

சர்வதேச முதலீட்டாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் (Ad Hoc Group of Bondholders - AHGB) மற்றும் உள்நாட்டு நிதி நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் (Local Consortium of Sri Lanka - LCSL) கூட்டு நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையிலான கலந்துரையாடலின் பின்னர், தனியார் பிணைமுறி வழங்குநர்களுடனான இணக்கப்பாட்டு எட்டப்பட்டுள்ளது. இந்நாட்டின் தனியார் பிணைமுறிகளில் 50% இற்கும் அதிகமானவற்றை இந்த குழுக்கள் கொண்டுள்ளன.

இந்த இணக்கப்பாடுகளுக்கமைய பிணைமுறிதாரர்கள் 11% தள்ளுபடி விகிதத்தின் அடிப்படையில் தற்போதைய கடன் பெறுமதியில் 40.3% தள்ளுபடியை வழங்க இணங்கியுள்ளனர். 

இந்த இணக்கப்பாடுகளுக்கு அமைய, 2024 ஜூலை மாதம் ஸ்தாபிக்கப்பட்ட ஒருங்கிணைந்த செயற்பாட்டு வரைவை விடவும் பெருமளவான கடன் சலுகை இலங்கைக்கு கிடைக்கவுள்ளதோடு, புதிய நிபந்தனைகள் அடிப்படையில் வட்டிக் கொடுப்பனவிலும் குறைப்புச் செய்யப்படும். 

இலங்கை 3.3 பில்லியன் டொலர் தனியார் கடனை மறுசீரமைப்பு செய்வதற்கான நிதி நிபந்தனைகள் தொடர்பில் சீன அபிவிருத்தி வங்கியுடன் (CDB) கொள்கை ரீதியான இணக்கப்பாட்டினை எட்டியுள்ளது.

சீன எக்ஸிம் வங்கி, ஸ்ரீ லங்கா உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழு (OCC), சீன அபிவிருத்தி வங்கி (CDB) மற்றும் பிணைமுறிதாரர்களுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் பலனாக, சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்ட காலப்பகுதிக்குள் இலங்கை 17 டொலர் பில்லியனுக்கும் அதிகமான கடன் சலுகைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். 

அதில் சீன எக்ஸிம் வங்கியின் 2.4 டொலர் பில்லியன்களும், உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழுவின் 2.9 டொலர் பில்லியன்களும், சீன அபிவிருத்தி வங்கியின் (CDB) 2.5 டொலர் பில்லியன்களும், பிணைமுறிதாரர்களின் 9.5 டொலர் பில்லியன்களும் அடங்கும். 

இந்த செயன்முறை முழுவதிலும் இலங்கையின் கடன் வழங்குநர்களும் சர்வதேச நாணய நிதியமும், உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களின் செயலகமும் வழங்கிய தொடர்ச்சியான ஒத்திழைப்பிற்கு இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெளிநாட்டுப்பொறிமுறைக்கு அரசாங்கம் அஞ்சுவது ஏன்? ;...

2025-03-16 10:40:40
news-image

முச்சக்கரவண்டியில் போதைப்பொருட்களை கொண்டு சென்றவர் கைது 

2025-03-16 10:10:08
news-image

சமூக ஊடகங்களில் பணம் சம்பாதிப்பதற்கு பாராளுமன்றத்தை...

2025-03-16 10:27:19
news-image

அரசுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியபோது பட்டலந்த அறிக்கையை...

2025-03-16 10:13:42
news-image

ஏப்ரல் 10ம் திகதி பட்டலந்த விசாரணை...

2025-03-16 09:49:47
news-image

மன்னாரில் திருடப்பட்ட பல இலட்சம் பெறுமதியான...

2025-03-16 09:47:17
news-image

அநுர அரசுக்கு ஏப்ரல் 21 வரை...

2025-03-16 09:46:44
news-image

இலங்கையுடனான கடன்மறுசீரமைப்பு ; 7பில்லின் டொலர்கள்...

2025-03-16 09:16:46
news-image

சீனாவுக்கான இராஜதந்திர பயணத்தில் பல்வேறு வெற்றி...

2025-03-16 09:15:54
news-image

ரணில் - சஜித் இணையும் வரை...

2025-03-16 09:13:26
news-image

இன்றைய வானிலை

2025-03-16 06:32:14
news-image

படையினரால் வன்கொடுமைக்குள்ளான தமிழ் பெண்களுக்கு நீதி...

2025-03-15 18:19:12