ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 108 பேர் கைது - நிஹால் தல்துவ

19 Sep, 2024 | 06:48 PM
image

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும்  14 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பொலிஸாருக்கு 464 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அவற்றில், வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 48 முறைப்பாடுகளும் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 316 முறைப்பாடுகளும் அடங்குகின்றன.

மேலும், நாடளாவிய ரீதியில் சட்டவிரோதமாக ஒட்டப்பட்ட 6,662,676  சுவரொட்டிகள் பொலிஸரால் நீக்கப்பட்டுள்ளதுடன் 219,203 சுவரொட்டிகள் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத கட்டப்பட்ட 1,609  பேனர்கள் பொலிஸரால் நீக்கப்பட்டுள்ளதுடன் 1,176 பேனர்கள் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட 1,613 கட்டவுட்கள் பொலிஸரால் நீக்கப்பட்டுள்ளதுடன்  1,632 கட்டவுட்கள் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதியின் புகைப்படங்களை வௌியிட அனுமதி பெற...

2024-10-10 22:11:24
news-image

வன்னியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...

2024-10-10 20:25:01
news-image

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை - கே.ரீ.குருசுவாமி

2024-10-10 20:25:53
news-image

கந்தளாய் சீனித் தொழிற்சாலையின் காணியை குறுகிய...

2024-10-10 19:29:28
news-image

பொதுத்தேர்தலில்  11 ஆசனங்களை பெறுவோம் -...

2024-10-10 19:07:53
news-image

முதியவர் கழுத்து நெரித்து கொலை ;...

2024-10-10 20:06:05
news-image

யாழ். மாவட்டத்தில் திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடவுள்ள...

2024-10-10 18:53:41
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் 

2024-10-10 18:55:08
news-image

மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

2024-10-10 21:09:34
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் பலஸ்தீனத் தூதுவர்  

2024-10-10 17:38:30
news-image

துருக்கித் தூதுவருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும்...

2024-10-10 17:33:57
news-image

வன்னியில் தமிழரசுக் கட்சி வேட்புமனு தாக்கல்

2024-10-10 17:34:41