விடுதியொன்றில் ஐஸ் போதைப்பொருள் பொதி செய்து கொண்டிருந்த காதல் ஜோடி கைது

Published By: Digital Desk 2

19 Sep, 2024 | 06:33 PM
image

பெலும்மஹர வெலிவேரிய வீதி பகுதியிலுள்ள விடுதியொன்றின் அறையொன்றில் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த காதல் ஜோடி கைது செய்யப்பட்டுள்ளதாக யக்கல பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் இன்று வியாழக்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பகஸ்பிட்டிய, கந்தமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய  ஒருவரும் அவிசாவளை மீகஹா கொடல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடையவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவது,

சந்தேகநபர் ஹிரியால பொலிஸாரினால் இதற்கு முன்னர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரிடம் இருந்து  26 கிராம் 250 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் மற்றவரிடம் இருந்து 3500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த...

2025-12-15 00:42:07
news-image

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் விசேட அறிக்கை

2025-12-14 20:53:23
news-image

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமி...

2025-12-14 22:49:10
news-image

அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்காக இலங்கை வந்த...

2025-12-14 22:04:01
news-image

கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் திறப்பு

2025-12-14 19:41:06
news-image

அரசாங்கத்தின் பங்களிப்பில் கல்வி பயின்று, பாராட்டுப்...

2025-12-14 19:51:08
news-image

இந்த நேரத்தில் கல்வி மாணவர்களுக்குச் சுமையாக...

2025-12-14 17:12:00
news-image

யாழில். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின்...

2025-12-14 17:13:55
news-image

நாட்டிலிருந்து புறப்பட்டது அமெரிக்க குழு

2025-12-14 17:12:45
news-image

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி...

2025-12-14 16:09:36
news-image

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் உறுதியுடன் ஒன்றிணைந்து...

2025-12-14 16:09:19
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் தீப்பிடித்து...

2025-12-14 15:32:01