ஆயிரக்கணக்கான வெடிப்பு சம்பவங்கள் அச்சத்தின் பிடியில் லெபனான்

Published By: Rajeeban

19 Sep, 2024 | 02:50 PM
image

ஆயிரக்கணக்கான வெடிப்புசம்பவங்களை தொடர்ந்து லெபனான் மக்கள் அச்சத்தின் பிடியில் சிக்குண்டுள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது.

இது குறித்து பிபிசி மேலும் தெரிவித்துள்ளதாவது

இரண்டுநாள் வெடிப்புசம்பவங்களின் பின்னர் பிபிசியின் அராபிய சேவையை சேர்ந்தவர்கள் லெபனானில் பொதுமக்களுடன் உரையாடிவருகின்றனர்.

நாங்கள் பார்த்தது படுகொலை எப்படி அர்த்தப்படுத்தினாலும் அது படுகொலை என தெரிவித்த பெண்ணொருவர் இளவயது ஆண்கள் கையில் இடுப்பில் கண்களில் காயங்களுடன் காணப்பட்டனர்,அவரால் எதனையும் பார்க்க முடியவில்லை என அவர்  குறிப்பிட்டார்.

மக்கள் பதற்றத்தின் பிடியிலும் அச்சத்திலும் சிக்குண்டனர், அவர்கள் சக மனிதனிற்கு அருகில் நடப்பதற்கு அஞ்சுமளவிற்கு நிலைமை காணப்படுகின்றது, வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும் என்றால் நிலைமை மிகவும் அச்சம் தருவதாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களால் தங்கள் கரிசனையையும் அச்சத்தையும் மறைக்க முடியாத நிலை காணப்படுகின்றது அவர்கள் தங்கள் பிள்ளைகள்,பெண்கள் முதியவர்கள் குறித்து அச்சமடைந்துள்ளனர் என வீதியில் காணப்பட்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.

நான் மாநாடு ஒன்றிற்காக செல்லவிருந்தேன்,ஆனால் செல்ல முடியாது லெபனான் முழுவதும் குழப்பம் அசௌகரியம் பதற்றம் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வெடிப்புச்சம்பவங்களின் பின்னர்  மருத்துவமனையில் காயமடைந்தவர்களை குருதியால் தோய்ந்த நிலையில் பார்த்தேன் என பத்திரிகையாளர் சாலி அபூ அல் ஜூத் தெரிவித்துள்ளார்.

ஒரு சில நிமிடங்களில் அடுத்தடுத்து அம்புலன்ஸ்கள் வந்தன,பலரின் முகத்திலும் கண்களிலும் காயங்கள் ஏற்பட்டிருப்பதை நான் பார்த்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

கைகளிலும் காயங்கள் ஏற்பட்டன பலருக்கு கைவிரல்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன மருத்துவர்கள் சத்திரசிகிச்சை செய்து கைகளை அகற்றவேண்டியிருக்கும் என தெரிவிக்கின்றனர் என அவர்  குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பகுதி...

2024-10-10 17:08:28
news-image

மில்டன் சூறாவளி கரையைக் கடந்தது: புளோரிடா...

2024-10-10 14:08:33
news-image

ஹெஸ்புல்லா அமைப்பு ரொக்கட் தாக்குதல் -...

2024-10-10 06:10:14
news-image

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்

2024-10-10 00:55:52
news-image

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான தேர்தலில்...

2024-10-09 16:53:56
news-image

ஹரியானாவில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது...

2024-10-09 16:51:03
news-image

ஜம்மு காஷ்மீரில் காணாமல் போன ராணுவ...

2024-10-09 15:15:17
news-image

தேர்தல் வாக்களிப்பு தினத்தன்று தாக்குதலை மேற்கொள்ள...

2024-10-09 14:54:38
news-image

“நஸ்ரல்லாவுக்கு அடுத்த ‘வாரிசுகளையும்’ அழித்துவிட்டோம்; இனி...

2024-10-09 13:50:55
news-image

பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகளில் பெரும்...

2024-10-09 11:06:53
news-image

தென்மேற்கு லெபனான் மீது தரைதாக்குதல் -...

2024-10-08 15:24:27
news-image

ஹமாஸ் மீண்டும் பீனிக்ஸ் போல சாம்பலில்...

2024-10-08 12:04:22